ஒருவரென்பது அதிகாரப் பட்டமையின், அகத்திற்கு வரும் உரிப்பொருட்பெயர் ஒன்றுதல் கொள்க.
உ-ம்:
‘‘வண்டுபடத் ததைந்த’’ என்னும் அகப் பாட்டினுள் (1) ‘‘முருக
னற்போர் நெடுவே ளாவி.........’யாங்கண்’’
எனவே
புறத்திணைத் தலைவன் இயற்பெயர் ஒன்றே வந்தவாறும், அவன் நிலக்
கருப்பொரு ளாய் அகத்திற்கு வந்தவாறும், உரிப்பொருட் டலைவன்
ஒருவனே யானவாறுங் காண்க. ‘‘எவ்வியிழந்த
வறுமையர் பாணர்,
பூவில் வறுந்தலை போலப் புல்லென்று’’
(குறுந்.19) என்பது
கருப்பொருளுவமமாய் வந்தது.
‘‘கேள்கே
டூன்றவும்’’ என்னும் அகப்பாட்டுப் (93)
புறத்திணைத் தலைவர் பலராய் அகத்திணைக்கண் அளவ
வந்தது. புறத்திணைக்கண் இயற்பெயர்
அளவி வரும் என்பதனானே, ‘‘முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை
துவைப்பவும்’’ என்னும் (158)
புறப்பாட்டு ‘‘எழுவர்
மாய்ந்த பின்றை’’ எனப் புறத்திணைத்
தலைவர் பலராய் வந்தது.
பிறவும் இவ்வாறு வருவன இதனான் அமைக்க.
இன்னும் இதனானே
அகப்புறமாகிய கைக்கிளை பெருந்திணைக்கும் இப்பன்மை
சிறுபான்மை கொள்க.
உ-ம்:
‘‘ஏறும் வருந்தின வாயரும் புண்கூர்ந்தார் நாறிருங் கூந்தற் பொதுமகளி ரெல்லாரு முல்லையந் தண்பொழில் புக்கார் பொதுவரோ டெல்லாம் புணர்குறிக் கொண்டு.’’
(கலி.101)
‘பொருந்தின்’
எனவே, தானுந் தன்னொடு பொருந்துவதூஉம் என இரண்டாக்கிச், சார்த்துவகையான் வரும் பெயர்க்குங் கொள்க. நாடக வழக்கினுளது முன்னர்ச் சூத்திரத்துட் காட்டினாம். பெயர்கள் பலவாதலின் ‘இல’ வெனப் பன்மை கூறினார். (55)
முதலாவது அகத்திணையியற்கு
மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த
காண்டிகையுரை முடிந்தது.
புறத்திணையியல்
வெட்சித்திணை குறிஞ்சிக்குப் புறனாதலும்
அது பதினான்கு துறைத்து ஆதலும்
|