யெனப்
பண்புத் தொகையாம். அதனை ‘முற்படக் கிளந்த’ (தொல். பொ. அகத். 1) என்புழிப் பிற்படக் கிளந்தனவும் உளவெனத் தோற்றுவாய் செய்து போந்து, அவற்றின் இலக்கணங்களும் பெயரும் முறையுந் தொகையும் வருகின்ற சூத்திரங்களான் திறப்படக் கூறுவல் என்றலின், மேலதனோடு இறைபுடைத்தாயிற்று. இச் சூத்திரம் முற்கூறிய குறிஞ்சித்திணைக்குப் புறன் வெட்சித்திணை என்பதூஉம், அதுதான் இப்பகுதித்தென்பதூஉம்
உணர்த்துதனுதலிற்று.
(இ-ள்.) அகத்திணை மருங்கின் அரிதல்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் - அகத்திணை யென்னும் பொருட்கட் பிணக்கற அறிந்தோர் கூறிய புறத்திணையது இலக்கணத்தைக் கூறுபட ஆராய்ந்து கூறின்; வெட்சி தானே குறிஞ்சியது புறனே -வெட்சியெனப்பட்ட புறத்திணை குறிஞ்சி யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம், உட்குவரத் தோன்றும் ஈரேர் துறைத்தே - அதுதான் அஞ்சுதகத் தோன்றும் பதினான்கு துறையினையுடைத்து
எ-று.
அகத்திணைக்கண் முதல்
கரு வுரிப்பொருள் கூறிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பனவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை தும்பை யென்பன அவ்வவ் விலக்கணங்களோடு ஒருபுடை யொப்புமை பற்றிச் சார்புடையவாதலும், நிலமில்லாத பாலை பெருந்திணை கைக்கிளை யென்பனவற்றிற்கு
வாகையுங்
காஞ்சியும் பாடாண்டிணையும் பெற்ற இலக்கணத்தோடு ஒருபுடை யொப்புமை பற்றிச்
சார்புடைய வாதலுங் கூறுதற்கு ‘அரில்தபவுணர்ந்தோ
ரென்றார். ஒன்று ஒன்றற்குச் சார்பாமாறு
அவ்வச் சூத்திரங்களுட்
கூறுதும். தானே யென்றார், புறத்திணை
பலவற்றுள் ஒன்றை
வாங்குதலின் பாடாண்டினை ஒழிந்தனவற்றிற்கும்
இஃதொக்கும்.
களவொழுக்கமுங் கங்குற் காலமுங்
காவலர் கடுகினுந் தான்
கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும்
போல்வன
ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார்.
வெட்சித்
திணையாவது களவின்கண் நிரைகொள்ளும்
ஒழுக்கம். இதற்கு
அப்பூச் சூடுதலும் உரித்தென்று கொள்க.
வேற்றுப்புலத்து வாழும்
பார்ப்பார் முதலியோர் அஞ்சி அரண் சேர்வதோர்
உபாயமாதலின்
‘உட்குவரத்தோன்று’மென்றார்.
|