நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5002
Zoom In NormalZoom Out


ல,     இருபெருவேந்தர் பொருவது  கருதியக்கால்  ஒருவர்  ஒருவர்
நாட்டு  வாழும்  அந்தணரும் ஆவும் முதலியனதீங்கு செய்யத் தகாத
சாதிகளை   ஆண்டுநின்றும்  அகற்றல்  வேண்டிப்  போதருகவெனப்
புகறலும்,    அங்ஙனம்   போதருதற்கு   அறிவில்லாத   ஆவினைக்
களவினாற்   றாமே   கொண்டுவந்து   பாதுகாத்தலுந்   தீதெனப்படா
அறமேயாம் என்றற்கு ‘ஆதந்தோம்ப’ லென்றார்.

அது.

‘‘ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரு
வெம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
வறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்’’
          (புறம்.9)

எனச்     சான்றோர்   கூறியவாற்றா  னுணர்க.  மன்னுயிர்  காக்கும்
அன்புடை  வேந்தற்கு  மறத்துறையினும்  அறமே  நிகழும்  என்றற்கு
‘மேவற்றாகு’மென்றார். அகநாட்டன்றிப் புறஞ்சிறைப் பாடியில் ஆநிரை
காக்குங்  காவலரைக்  கொன்றே  நிரைகொள்ள  வேண்டுதலின்  ஊர்
கொலையுங்  கூறினார்.  வேந்துவிடு  வினைஞர் என்னாது ‘முனைஞர்’
என்றதனானே    முனைப்புலங்   காத்திருந்தோர்   தாமே   சென்று
நிரைகோடலுங்,   குறுநிலமன்னர்   நிரைகோடலும்,   ஏனை  மறவர்
முதலியோர்  நிரைகோடலுமாகிய  வேத்தியல் அல்லாத பொதுவியலுங்
கொள்க.  முன்னர்  (தொல்.  பொ.  புறத்.  1)  வெட்சி  குறிஞ்சிக்குப்
புறனெனக்    களவுகூறிய    அதனானே,    அகத்திற்கு    ஏனைத்
திணைக்கண்ணுங்  களவு  நிகழ்ந்தாற் போலப் புறத்திணை யேழற்குங்
களவுநிகழுங்கொ  லென்று  ஐயுற்ற  மாணாக்கற்கு  வெட்சிக்கே களவு
உள்ளதென்று  துணிவுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே
களவு    உளதாக    வரைந்தோதினார்.    ‘வேந்துவிடு   முனைஞர்’
என்றமையான்,   இருபெருவேந்தருந்   தண்டத்   தலைவரை   ஏவி
விடுவரென்றும், ‘ஆ தந்தோம்பும்’ என்றதனாற் களவின்கட் கொண்ட