நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5004
Zoom In NormalZoom Out


பெயர்த்தற் கன்னாய்
கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை
மீளாது மீளார் விறல்வெய்யோர் யாதாங்கொல்
வாளார் துடியர் வளம்’’
              (புறத்திரட்டு.1245)

இவை கண்டோர் கூற்று.

பாக்கத்து விரிச்சி - நிரைகோடற்கு எழுந்தோர்   போந்து  விட்ட
பாக்கத்துக்   கங்குலின்  நல்வாய்ப்புட்  கேட்டலும்,  நிரை  மீட்டற்கு
எழுந்தோர்     இடைப்புலத்துப்    புறம்போந்தோர்    கூறியவற்றை
வாய்ப்புள்ளாகக் கேட்டலும்;

உ-ம்:

‘‘திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி
நரைமுதியோ னின்றுரைத்த நற்சொ - னிரையன்றி
யெல்லைநீர் வைய மிறையோர்க் களிக்குமால்
வல்லைநீர் சென்மின் வழி’’
             (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1239)

‘‘வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்போர் மாட்டிசைத்த
பைந்தொடியார் கூறும் பறவாப்பு - ளுய்ந்த’’

‘‘நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை
வரையளவைத் தாவதா மண்’’

இவை விரிச்சியை வியந்தன.

புடைகெடப்   போகிய  செலவே  -  நிரைகோடற்கு  எழுந்தோர்
ஆண்டுநின்று   மீண்டுபோய்ப்  பற்றார்  புலத்து  ஒற்றர்  உணராமற்
பிற்றை   ஞான்று   சேறலும்,   நிரைமீட்டற்கு  எழுந்தோர்  ஆண்டு
ஒற்றப்படாமற் சேறலும்;

உ-ம்:

‘‘பிறர்புல மென்னார் தமர்புல மென்னார்
விறல்வெய்யோ ராயிருட்கட் சென்றார் - நிரையுங்
கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானைப்
படாஅ முகம்படுத் தாங்கு’’

(பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1240.நிரைகோடல்.9)

‘‘கங்கை பரந்தாங்குக் கானப் பெருங்கவலை
யெங்கு மறவ ரிரைத்தெழுந்தார்-தங்கிளைக்கண்
மன்றுகாண் வேட்கை மடிசுரப்பவேதோன்றும்
கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு.’’ 
(புறத்திரட்டு.1246)

இவை கண்டோர் கூற்று.

புடைகெட    ஒற்றின் ஆசிய வேயே - நுரைகோடற்கு எழுந்தோர்
பகைப்புலத்து   ஒற்றர்   உணராமற்   சென்று   ஒற்றி  அவ்வொற்று
வகையான்  அவர்  உணர்த்திய  குறளைச்  சொல்லும், நிரைமீட்டற்கு
எழுந்தோர்  அங்ஙனம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஓதிய குறளைச்
சொல்லும்;

உ-ம்:

‘‘ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங்
கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர
வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு
கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு.’’

‘‘நெடுநிலை யாயத்து நிரைசுவ டொற்றிப்
படுமணி யாயம்