நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5006
Zoom In NormalZoom Out


அற்றமின்றி மீட்டலும்;

உ-ம்;

‘‘கொடுவரி கூடிக் குழுஉக்கொண் டனைத்தா
னெடுவரை நீள்வேய் நரலும் - நடுவூர்
கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற
நிணநிரை வேலார் நிலை’’ (புற.வெ.வெட்சி.9)
கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின்
மிடல்பெரி தெய்தின மாதோ - தொடலைக்
கரந்தை மறவர்க் கருதார் குழாஅந்
துரந்து நிரைமீட்ட தோள்.’’
(பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு.1247.நிரைமீட்சி.5)

இவை கண்டோர் கூற்று.

தொடலைக்     கரந்தையெனக்   கரந்தை  சூடினமை  கூறினார்.
தன்னுறுதொழிலான் நிரைமீட்டலின். இது பொதுவியற் கரந்தையிற் (60)
கூறுதும்.

பூசன் மாற்று - நிரைகொண்டு போகின்றார் தம்பின்னே உளைத்தற்
குரலோடு  தொடர்ந்து சென்று ஆற்றிடைப் போர் செய்தோரை மீண்டு
பூசலை   மாற்றுதலும்,   நிரையை   மீட்டுக்  கொண்டு  போகின்றார்
தம்பின்னர்வந்து    போர்செய்தோரை    மீண்டு   நின்று   பூசலை
மாற்றுதலும்;

உ-ம்:

‘‘ஒத்த வயவ ரொருங்கவிய நாண்படரத்
தத்த மொலியுந் தவிர்ந்தன-வைத்தகன்றார்
தம்பூசன் மாற்றி நிரைகொள்வான் றாக்கினார்
வெம்பூசன் மாற்றிய வில்.’’

‘‘இரவூ ரெறிந்து நிரையொடு பெயர்ந்த
வெட்சி மறவர் வீழவு முட்காது
கயிறியல் பாவை போல வயிறிரித்
துழைக்குரற் குணர்ந்த வளைப்புலி போல
முற்படு பூசல் கேட்டனர் பிற்பட
நிணமிசை யிழுக்காது தமர்பிண மிடறி
நிலங்கெடக் கிடந்த கருந்தலை நடுவண்
மாக்கட னெருப்புப் போல நோக்குபு
வெஞ்சிலை விடலை வீழ்ந்தன
னஞ்சுதக் கன்றாற் செஞ்சோற்று நிலையே.’’

இது கண்டோர் கூற்று.

வெட்சிமறவர் வீழ்ந்தமை  கேட்டு  விடாது  பின்வந்தோன்  பாடு
கூறினமையிற் பூசன்மாற்றாயிற்று.

நோய்    இன்று உய்த்தல் - நிரைகொண்டோர் அங்ஙனம் நின்று
நின்று  சிலர்  பூசன்மாற்றத்  தாங்கொண்ட நிரையினை இன்புறுத்திக்
கொண்டு  போதலும்,  மீட்டோரும்  அங்ஙனம்  நின்று  நின்று சிலர்
பூசன்மாற்றத் தாம் மீட்ட நிரையினை இன்புறுத்திக்