க்கு வென்றிப் பொருட்டு விளைந்த
கொடைப்பகுதியும்;
உ-ம்:
‘‘இளமா வெயிற்றி யிவைகாணின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்த நிரைகள் கொல்லன் றுடியன் கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்த முன்றி னிறைந்தன.’’
(சிலப்.வேட்டுவவரி‘‘கொடைத் தொழி லெல்லாங் குறைவின்றிப் பண்டே முடித்தன னென்றிருந்த மூத்தோன் - கொடைக்கு வரம்பில னென்றே மருண்டா னிரைகோட் கரந்தையங் கண்ணியாற் கண்டு.’’
இவை
கண்டோர் கூற்று. என ஈரேழ்
வந்த வகையிற்றாகும் - என்று கூறப்பட்ட பதினான்கும் மீட்டுமொருகால் விதந்த இரு கூற்றையுடைத்தாகும் வெட்சித்திணை
எ-று. எனவே
ஒன்று இரண்டாய் இருபத்தெட்டாயிற்று. இனித்
துறையென முற்கூறினமையின், இது காரியமாக இதற்குக் காரணமாயினவெல்லாம் படையியங்கரவமெனவே படும். அவை இருபெருவேந்தரும் போர்தொடங்குங்காற் பூக்கோளேவி நிரைகோடல் குறித்தோன் படைத்தலைவரைத் தருக வென்றலும்,
அவர் வருதலும், அவர் வந்துழி இன்னது செய்க வென்றலும்,
அவர் வேந்தற்கு உரைத்தலும், அவர் படையைக் கூஉய் அறிவித்தலும், படைச்செருக்கும், அதனைக் கண்டோர் கூறலும், அவர் பகைப்புலக் கேட்டிற்கு இரங்கி வருந்தலும், நாட்கோடலும், அவர் கொற்றவைக்குப் பரவுக்கடன் பூண்டலும் பிறவுமாம். களவிற் செல்வோர்க்கும் அரவங்கூறினார், அவர் பாக்கத்தே தங்கி விரிச்சிபெற்றுப் போதலின். அவற்றுட் சில வருமாறு:-‘‘கடிமனைச் சீறூர்க் கருங்கட் கறவை வடிநவில் வேலோன் மறுத்தோம்ப லோட்டா னடிபுனை தோலி னரண்சேர்ந்து மள்ளர் வருகமன் வாயிற் கடை.’’ இது
படைத்தலைவர் படையாளரைக் கூயினது.‘‘வாள்வலம் பெற்ற வயவேந்த னேவலாற் றாள்வ லிளையவர் தாஞ்செல்லி - னாளைக் கனைகுர னல்லாத்தன் கன்றுள்ளப் பாலா னனைவது போலுநம் மூர்.’’ (பெரும்பொருள்
விளக்கம். புறத்திரட்டு.1237.நிரைகோடல்.6) இது
படைச்செருக்கு; கண்
|