மண்
நசை - இருபெருவேந்தர்க்கும்
இடையீடாகிய மண்ணிடத்து வேட்கையானே; அஞ்சுதகத் தலைச்சென்று - ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதலுண்டாக அந்நாட்டிடத்தே சென்று; வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று - ஒரு வேந்தனை ஒரு வேந்தன் கொற்றங்கோடல் குறித்தல் மாத்திரைத்து வஞ்சித்திணை
எ-று.
ஒருவன் மண்ணசையான்
மேற்சென்றால் மற்றவனும் அம்மண்ணழியாமற் காத்தலுக்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின், அவ்விருவரும் வஞ்சி வேந்த ராவரென்றுணர்க. எதிர்சேறல் காஞ்சி என்பராலெனின், காஞ்சியென்பது எப்பொருட்கும் நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மைப் பெயராற் கூறலாகாமை யுணர்க. ஒருவன் மேற்சென்றுழி ஒருவன்
எதிர்செல்லாது தன்மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின், அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதிகமான் இருந்ததாம். இங்ஙனம் இருவரும் வஞ்சிவேந்தரெனவே, மேற்கூறும் துறை பதின்மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலா மென்றுணர்க.
(7)
வஞ்சி பதின்மூன்று
துறைத்து ஆதல்
|