நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5020
Zoom In NormalZoom Out


குரன் முரசே’ (பதிற்றுப்.30)

என வரும்.

இது பதிற்றுப்பத்து.

‘துறை’ எனவே கள்ளும் பாகும் முதலியனவும் அப்பாற் படும்.

‘‘வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோ ரன்ன விளைய ரிருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே.’’
 
       (புறம்.286)

‘‘உண்டியின் முந்தா துடனுண்பான் றண்டேறன்
மண்டி வழங்கி வழீஇயதற்கோ - கொண்டி
மறவர் மறமிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க்
குறவிலர் கண்ணோடா தோர்ந்து’’

என்பன கொள்க.

வென்றோர்      விளக்கமும்   -    அங்ஙனம்     பிண்டமேய
இருபெருவேந்தருள்  ஒருவர்  ஒருவர்  மிகை கண்டு அஞ்சிக் கருமச்
சூழ்ச்சியாற்றிறைகொடுப்ப    அதனை   வாங்கினார்க்கு   உளதாகிய
விளக்கத்தைக் கூறலும்;

உ-ம்;

‘‘அறாஅ யாண ரகன்கட் செறுவி
னருவி யாம்ப னெய்தலொ டரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த செழுந்செந் நெல்லி
னம்பண வளவை யுறைகுவித் தாங்குக்
கடுந்தேற் றுறுகிளை மொசிந்தன துஞ்சுஞ்
செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாஅரின்
உலந்தனர் பெருமிநின் னுடற்றி யோரே
யூரெரி கவர வுருத்தெழுந் துரைஇப்
போர்புசுடு கமழ்புகை மாதிர மறைப்ப
மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்
குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயி
லாரெயிற் றோட்டி வௌவினை யேற்றொடு
கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து
புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப
மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ
வான்பயம் வாழ்நர் கழுவுடலை மடங்கவப்
பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென
வருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற்
பெருங்களிற் றியானையோ டருங்கலந் தரா அர்
மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்க