நின்னூழி யுரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி யறிந்தனை யருளா யாயின் யாரிவ ணெடுந்தகை வாழு மோரே’’
(பதிற்றுப்.71)
என வரும்.
‘‘இருங்கண் யானையோ டருங்கலந் தெறுத்துப் பணிந்துகுறை மொழித லல்லது பகைவர் வணங்கா ராதல் யாவதோ மற்றே.’’
(பதிற்றுப்.) இதுவும் அது. இவை
பதிற்றுப்பத்து. தோற்றோர்
தேய்வும் - அங்ஙனந் திறைகொடுத்தோரது குறைபாடு
கூறுதலும்;உ-ம்;‘‘வாஅன் மருப்பிற் களிற்றியானை நிரை மாமலையிற் கணங்கொண்டவ ரெடுத்தெறிந்த விறன்முரசங் கார்மழையிற் கடிதுமுழங்கச் சாந்துபுலர்ந்த வியன்மார்பிற் றொடிசுடிர்வரும் வலிமுன்கைப் புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்காற் பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வா ளொடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ யிடுக திறையே புரவெதிர்ந் தோர்க்கென வம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ வனையை யாகன் மாறே பகைவர் கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக் கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசை தொலையாக் கற்பநின் றெம்முனை யானே’’
(பதிற்றுப்.80) என வரும். இது
பதிற்றுப்பத்து. குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் -
வேந்தனது குறையாத வெற்றிச் சிறப்பினாற்
பகைவர் நாடழிதற் கிரங்கித்
தோற்றோனை விளங்கக் கூறும் வள்ளைப்பாட்டும்; வள்ளை.
உரற்பாட்டு. கொற்றவள்ளை,
தோற்ற கொற்றவன் கொடுக்குந் திறை
என்று சொல்வாரும் உளர்.
உ-ம்; ‘‘வேரறுகு பம்பிச் சுரைபரந்து வேளைபூத்து ஊரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் அகையிலைவேல் காய்த்தினார் நாடு’’
(முத்தொள். புறத்திரட்டு.1279. பகைப்புலம் பழித்தல் 4)என வரும். அழிபடை
தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ - அங்ஙனம் வென்றுந் தோற்றம் மீண்ட வேந்தர் தம் படையாளர் முன்பு போர் செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக்கொ
|