நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5022
Zoom In NormalZoom Out


ண்டழிந்தவர்களைத்    தாஞ்    சென்றும்   பொருள்   கொடுத்தும்
வினாவியுந்   தழுவிக்கோடலுடனே   முற்கூறியவற்றைத்   தொகுத்து;

படைதட் டழிவோர் என்று மாறுக.  தழிச்சுதல்  தழிஞ்சி யாயிற்று,
‘‘பொருகணை தழிச்சிய புண்டீர் மார்பின்’’ என்றாற் போல.

உ-ம்;

‘‘தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும்
பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற்
சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன
புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்.’’
   (பெரும்பொருள் விளக்கம்.புறத்திரட்டு.1273.பாசறை 6)

என வரும்.

‘‘வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு
பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிர்ப்பப்
புடைவீ ழந்துகி லிடவயிற் றழீஇ
வாட்டோட் கொத்த வன்கட் காளை
சுவன்மிசை யசைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே’’

                                (நெடுநல். 176.188)

இதுவும் அது.

கழிபெருஞ்  சிறப்பின்   துறை  பதின்மூன்றே  -  மிகப்  பெருஞ்
சிறப்பினையுடையவாகிய துறை பதின்மூன்றாம் எ-று.

வென்றோர்     விளக்கம் முதலிய   மூன்றும் ஒழிந்தனவெல்லாம்
இருவர்க்கும்       பொதுவாய்       வருமென்பது       தோன்றக்
‘கழிபெருஞ்சிறப்பெ’ன்றார்.

இனி  இயங்குபடையரவ  மெனவே  இயங்காத   வின்ஞாணொலி
முதலியனவும் கொள்க.

இத்திணைக்கும்  பலபொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப்படுத்தலுங்
கொள்க.    அவை:-   கொற்றவை   நிலையுங்,   குடைநாட்கோளும்,
வாணாட்கோளும்,     படையெழுச்சி     கண்டோர்    கூறுவனவும்,
பகைப்புலத்தார்   இகழ்வும்,  இவைபோல்வன  பிறவும்  இயங்குபடை
யரவமாய் அடங்கும்.

நிரைகோடற்கு ஏவிய  அரசருள்  நிரைகொண்டோர்க்கும்   நிரை
கொள்ளப் பட்டோர்க்கும் விரைந்து