நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5027
Zoom In NormalZoom Out


‘‘மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
தான்முன்னிய துறைபோகலின்’’   (பத்துப்.பட்டின.271-273)

என்பதும் அது, மாற்றார் மதிலும் அகழுஞ் சுட்டிக் கூறலின்.

‘‘அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற்
செறியரிச் சிலம்பிற் குறந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடுந்
தண்ணான் பொருனை வெண்மணற் சிதையக்
கருங்கைக் கொல்ல ணரஞ்செய் யவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறுங்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
வாங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே’’   (புறம்.36)

இது புறத்துழிஞையோன்கண் தூதன் அவன்சிறப்பு எடுத்துரைத்தது.

‘‘வயலைக் கொடியின் வாடிய மருங்கு
லுயவ லூர்திப் பயலைப் பார்ப்பா
னெல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே
யேணியுஞ் சீப்பு மாற்றி
மாண்வினை யானையு மணிகளைந் தனவே’’    (புறம்.305)

இது   தூதருரை  கேட்ட   அகத்துழிஞையோன்   திறங்கண்டோர்
கூறியது.

இவை புறம்.

தொல்  எயிற்கு  இவர்தலும் - ஒருகாலத்தும் அழிவில்லாத மதிலை
இற்றைப்பகலுள்  அழித்துமென்று   கூறி அஃது அழித்தற்கு விருப்பஞ்
செய்தலும்;

உ-ம்:

‘‘இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப்
பொற்றாரான் போனகங்கைக் கொள்ளானா - லெற்றாங்கொ
லாறாத வெம்பசித்தீயாற வுயிர்பருகி
மாறா மறலி வயிறு’’                 (புறத்திரட்டு.1927)

என வரும்.

‘‘மறனுடை மறவர்க் கேறவிட னின்றி
நெய்யோ டையவி யப்பியெவ் வாயு
மெந்திரப் பறவை யியற்றின நிறீஇக்
கல்லுங் கவணும் கடுவிசைப் பொறியும்
வில்லும் கணையும் பலபடப் பரப்பிப்
பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு
மென்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு
முந்தை மகளிரை யியற்றிப் பின்றை
யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச்
சுட்டல் போயின் றாயினும் வட்டத்
தீப்பாய் மகளிர் தி