நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5030
Zoom In NormalZoom Out


மவ்வழித் தோன்றித்
திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற்
புண்கூர் மெய்யினுரா அய்ப் பகைவர்
பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை
யாண்டகை மறவர் மலிந்துபிறர்
தீண்டல் தகாது வேந்துறை யரணே’’    (தகடூர் யாத்திரை)

இஃது  அகத்தோன் செல்வம்  போற்றுதற்கு ஏதுவாகிய  முழுவரண்
கூறுதலிற் செல்வத்துள் அடங்காதாயிற்று.

இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது.

சொல்லப்பட்ட  நாலிருவகைத்தே - மேலிரு  நால்வகைத்  தென்று
சொல்லப்பட்ட இருநான்கு பகுதியதாம் உழிஞைத் திணை எ-று.

முற்கூறிய   தொகையேயன்றி    ஈண்டுந்    தொகை   கூறினார்.
அந்நாலிரண்டுமேயன்றி   அவைபோல்வனவும்   நாலிரண்டு   துறை
தோன்று  மென்றற்கு.  அவை  புறத்து  வேந்தன்  தன் துணையாகிய
அரசனையாயினுந்   தன்   படைத்தலைவரையாயினும்  ஏவி  அகத்து
வேந்தர்க்குத்  துணையாகிய  அரசனது  முழு  முதலரண்  முற்றிலும்
அவன்றா   னதனைக்   காவல்   கோடலும்  நிகழ்ந்தவிடத்தும்  இவ்
விருநான்கு வகையும் இருவர்க்கு முளவாதலாம்.

உதாரணம்     முற்காட்டியவே; வேறு வேறு காட்டினும் அமையும்.
இத்திணைக்குப்     ‘படையியங்கரவ’    (புறம்.8)     முதலியனவும்
அதிகாரத்தாற் கொள்க. அது,

‘‘இலங்குதொடி மருப்பிற் கடாஅம் வார்த்து
நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சர
மெரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக்
கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி
கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ
டூன்வினை கடுக்குந் தோன்றல பெரிதெழுந்
தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்