நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5031
Zoom In NormalZoom Out


தேர்
கண்விட் டனவே முரசங் கண்ணுற்றுக்
கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக்
கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப
நெடுமதி னிரைஞாயிற்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎ
நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ
யொல்லா மன்னர் நடுங்க
நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே’’     (பதிற்றுப்பத்து)

என வரும்.

இனித்   தேவர்க்குரியவாக     உழிஞையிற்றுறைகள்     பலவுங்
கூறுவாருளராலெனின்,     அவை     உலகியலாகிய    அரசியலாய்
எஞ்ஞான்றும்   நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வன
வாகலின் ‘தமிழ்  கூறு  நல்லுலகத்’தன (தொல்.பாயிரம்) அல்லவென
மறுக்க.   இனி  முரசழிஞை  வேண்டுவா  ருளரெனின் முரசவஞ்சியுங்
கோடல் வேண்டுமென மறுக்க.

இனி ஆரெயிலுழிஞை முழுமுதலரணம் என்றதன்கண் அடங்கும்.

இனி  இவற்றின் விகற்பிப்பன வெல்லாம்  அத் துறைப்பாற்படுத்திக்
கொள்க.

உழிஞை வேந்தர் இருவர்க்கும் பொதுவாம் துறைகள்
 

68.குடையும் வாளு நாள்கோ ளன்றி
மடையமை யேணிமிசை மயக்கமுங் கடைஇச்
சுற்றம ரொழிய வென்று கைக்கொண்டு
முற்றிய முதிர்வு மன்றி முற்றிய
அகத்தோன் வீழ்ந்த நொச்சியு மற்றதன்
புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும்
நீர்ச்செரு வீழ்ந்த பாசியு மதாஅன்று
ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும்
அகமிசைக் கிவர்ந்தோன் பக்கமும் இகன்மதிற்
குடுமி கொண்ட மண்ணுமங் கலமும்
வென்ற வாளின் மண்ணோ டொன்றத்
தொகைநிலை யென்