நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5032
Zoom In NormalZoom Out


னுந் துறையொடு தொகைஇ
வகைநான் மூன்றே துறையென மொழிப.
 

இஃது     எய்தாத     தெய்துவித்தது;      உழிஞைத்திணையுள்
இருபெருவேந்தர்க்கும்  ஒன்றாய்ச்  சென்று  உரியவான துறை இதற்கு
முன்னர்க் கூறாமையின்.

(இ-ள்.)     குடையும்    வாளும்  நாள்கோள்  அன்றி  -  தன்
ஆக்கங்கருதிக்              குடிபுறங்காத்து        ஓம்பற்கெடுத்த
குடைநாட்கொள்ளுதலும்  அன்றிப்   பிறன்கேடு   கருதி   வாணாட்
கொள்ளுதலும் அன்றி;

புறத்தோன்   புதிதாக  அகத்தே  புகுதற்கு  நாள்கொள்ளுமென்க,
தன்னாட்டினின்றும்   புறப்படுதற்கு    நாட்கோடல்   உழிஞையெனப்
படாதாகலின். அகத்தோனும் முற்று விடல்வேண்டி மற்றொரு வேந்தன்
வந்துழித்    தானும்    புறத்துப்     போதருதற்கு   நாட்கொள்ளும்.
நாள்கொளலாவது  நாளும்  ஓரையுந் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி
அக்    காலத்திற்கு    ஓர்   இடையூறு   தோன்றியவழித்   தனக்கு
இன்றியமையாதனவற்றை  அத்திசை  நோக்கி  அக்காலத்தே முன்னர்ச்
செல்லவிடுதல்.

உ-ம்:

‘‘பகலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி
யிகலரணத் துள்ளவ ரெல்லா - மகநலிய
விண்டஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள்
கண்டஞ்சிச் சிம்பிளித்தார் கண்.’’

     (பெரும்பொருள் விளக்கம்.புறத்திரட்டு.எயில்கோடல்)

இது புறத்தோன் குடை நாள்கோள்.

‘‘குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று
நின்றுயர் வாயிற் புறநிவப்ப - வொன்றார்
விளங்குருவப் பல்குடை விண்மீன்போற் றோன்றித்
துளங்கினவே தோற்றந் தொலைந்து’’

       (தகடூர் யாத்திரை.புறத்திரட்டு.1337.எயில்காத்தல்3)

இஃது அகத்தோன் குடை நாட்கோள்.