பவு மேல்விழுந்த வேந்தன் படைப்பிணத்து வீழ்தலா - னாங்கு மதுக்கமழுந் தார்மன்னர்க் குள்ளூர் மறுகிற் பதுக்கையும் வேண்டாதாம் பற்று’’
இஃது அகத்தோன் பாசிமறம்.
அகமிசைக்கு
இவர்ந்தோன் பக்கமும் -
புறஞ்சேரிமதிலும்
ஊரமர்மதிலும் அல்லாத கோயிற் புரிசைகளின் மேலும் ஏறிநின்று போர்செய்தற்குப் பரந்துசென்றோன்
கூறுபாடும்;
உ-ம்:
‘‘வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற் கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர் - ஞாயிற் கொடுமுடிமேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக நெடுமுடிதாங் கோட னினைந்து’’
இது புறத்தோன் அகமிசைக்கிவர்தல்.
‘‘புற்றுறை பாம்பின் விடநோக்கம் போனோக்கிக் கொற்றுறை வாய்த்த கொலைவேலோர் - கொற்றவ னாரெயின்மேற் றோன்றினா ரந்தரத்துக் கூடாத போரெயின்மேல் வாழவுணர் போன்று’’
இஃது அகத்தோன் அகமிசைக்கிவர்தல்.
இகன்மதிற்
குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் -
அங்ஙனம் இகல்செய்த மதிற்கண் ஒருவன்
ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெயரானே முடியுனைந்து நீராடும்
மங்கலமும்;
உ-ம்:
‘‘மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போற் பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தி - னெழின்முடி சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து’’
இது புறத்தோன் மண்ணு மங்கலம்.
‘‘வென்றி பெறவந்த வேந்தை யிகன்மதில்வாய்க் கொன்று குடுமி கொளக்
|