நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5038
Zoom In NormalZoom Out


கண்டு - தன்பால்
விருந்தினர் வந்தார்க்கு விண்விருந்து செய்தான்
பெருந்தகையென் றார்த்தார் பிறர்’’

இஃது அகத்தோன் மண்ணு மங்கலம்.

வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற - இருபெருவேந்தருள் ஒருவன்
ஒருவனை    வென்றுழி   அங்ஙனம்   வென்ற   கொற்றவாளினைக்
கொற்றவைமே னிறுத்தி நீராட்டுதலோடே கூட;

உ-ம்:

‘‘செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த
கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொல் - முற்றியோன்
பூவொடு சாந்தும் புகையவி நெய்ந்நறைத்
தேவொடு செய்தான் சிறப்பு’’

இது புறத்தோன் வாண்மங்கலம்.

‘‘வருபெரு வேந்தற்கு வான்கொடுத்து மற்றை
யொருபெரு வேந்தற்கூ ரீந்தா - ளொருவன்வா
ளிவ்வுலகிற் பெற்ற விகற்கலையேற் றூர்தியா
ளவ்வுலகிற் போய்ப்பெறுங்கொ லாங்கு’’

இஃது அகத்தோன் வாண்மங்கலம்.

ஒன்றென  முடித்தலான் இருவர்  வேற்குஞ் சிறபான்மை மண்ணுதல்
கொள்க.

‘‘பிறர்வேல் போலா தாகி யிவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே
யிரும்புற நீறு மாடிக் கலந்திடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினுங் கிடக்கும்
மங்கல மகளிரொடு மாலை சூட்டி
யின்குர லிரும்பை யாழெடுத் தியம்ப
தெண்ணீர்ப் படுவினுந் தெருவினுந் திரிந்து
மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங்
கிருங்கடற் றானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா னாதே’’   (புறம்.332)

என வரும்.

தொகைநிலை  என்னுந் துறையொடு   தொகைஇ   -   அவ்வாண்
மங்கலம் நிகழ்ந்த பின்னர் இருவருள் ஒ