ருவர்
பரந்துபட்ட படைக்கடற்
கெல்லாஞ் சிறப்புச் செய்வான்
ஒருங்கு வருகெனத் தொகுத்தல் என்னுந் துறையொடு முற் கூறியவற்றைத்
தொகுத்து;
உ-ம்:
‘‘கதிர்சுருக்கி யப்புறம்போங் காய்கதிர்போல் வேந்தை யெதிர்சுருக்கி யேந்தெயில்பாழாக்கிப் - பதியிற் பெயர்வான் றொகுத்த படைத்துகளாற் பின்னு முயர்வான் குறித்த துலகு’’
இது புறத்தோன் தொகைநிலை.
‘‘தலைவன் மதில்சூழ்ந்த தார்வேந்தர்க் கொன்று வலைவன் வலைசுருக்கி யாங்கு -
நிலையிருந்த தண்டத் தலைவர் தலைக்கூட வீற்றிருந்தா னுண்டற்ற சோற்றா ரொழிந்து’’
இஃது அகத்தோன் தொகைநிலை.
வகைநால் மூன்றே
துறை என மொழிப - அங்ஙனம் ஒன்று இரு
வகைப்பட வந்த பன்னிரண்டேயாம் உழிஞைத்துறை என்று
கூறுவர்
ஆசிரியர்
எ-று.
முற்றலையுங்
கோடலையும்
இருவகையென்றார். துறை யென்றதனான் அவற்றின் பகுதியாய் வருவனவும்
அத்துறைப்பாற் படுத்துக. உழையரை அழைத்து நாட்கொள்க என்றலும், அவர் அரசர்க்கு உரைப்பனவுங், குடைச்சிறப்புக் கூறுவனவும்,
முரசு முதலியன நாட்கோடலும், பிறவுங் குடைநாட் கோடலாய் அடங்கும். இது வாணாட் கோடற்கும் ஒக்கும். பொருவார்க்கும் அல்லுழிப் போவார்க்குங் குடை பொதுவாகலின் முற்கூறி, மேல்வருகின்ற போர்த்தொழிற்கே சிறத்தலின் வாளினைப் பிற்கூறினார். இவை போர்த்தொழிற்கு ஏதுவாகலின் முற்கூறினார். எயிலுட் பொருதலும், புட்போல உட்பாய்தலும், ஆண்டுப்பட்டோர் துறக்கம் புகுதலும், பிறவும் பாசிமறத்தின்பாற் படும். ஏ
|