இஃது அத்தும்பைக்குப்
பொதுவிலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
மைந்து பொருளாக வந்த வேந்தனை - தனது வலியினை உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறு பொருளாகக் கருதி மேற்சென்ற வேந்தனை; சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்றென்ப - அங்ஙனம் மாற்றுவேந்தனும் அவன் கருதிய மைந்தே தான் பெறு பொருளாக எதிர்சென்று அவனைத் தலைமை தீர்க்குஞ் சிறப்பினை யுடைத்து அத்தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று.
வரல் செலவாதல்
‘‘செலவினும் வரவினும்’’ (தொல். சொல். கிளவி.
28) என்பதன் பொதுவிதியாற் கொள்க. ‘மைந்து பொருளாக’ என்பதனை
வந்த என்பதற்குஞ் சென்று என்பதற்குங் கூட்டுக, அஃது இருவர்க்கும்
ஒத்தலின். எனவே இருவரும் ஒருகளத்தே பொருவாராயிற்று.
இது வேந்தனைத் தலைமையாற் கூறினாரேனும் ஏனையோர்க்குங் கொள்க, அவரும்
அதற்குரியராதலின்.
இதனைச் சிறப்பிற் றென்றதனான் அறத்திற் றிரிந்து வஞ்சனை யாற் கொல்வனவும் தேவராற் பெற்ற வரங்களாற் கொல்வனவும்,
கடையூழிக் கட்டோன்றிய ஆதலிற்
சிறப்பிலவாம். அவையுஞ் சிறுபான்மை கொள்க.
(15)
தும்பைக்குரிய சிறப்புவிதி
|