நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5044
Zoom In NormalZoom Out


ராயிற்று.   அவர்  போர்கண்டு  சிறப்புச்செய்யும் தேவரும் பிணந்தின்
பெண்டிரும்  படையாளர்  தாயரும்  அவர்  மனைவியருங் கூத்தரும்
பாணரும்   பொருநரும்  விறலியருங்  கண்டோரும்  பிறரு  மென்று
கொள்க.

துறக்கம்புகு   வேட்கையுடைமையிற்  காலாளை   முற்கூறி, அதன்
பின்னர்  மதத்தாற்  கதஞ்சிறந்து  தானும் போர்செய்யும்  யானையைக்
கூறி,   மதஞ்சிறவாமையிற்   கதஞ்சிறவாத   குதிரையை   அதன்பிற்
கூறினார்.  குதிரையானன்றித்  தேர்  தானே  செல்லாமையிற் றேர்க்கு
மறமின்றென்று அது கூறாராயினார்.

‘நிலை’     யென்னாது ‘வகை’ யென்றதனான் அம்மூன்று நிலையுந்
தாமே   மறஞ்சிறப்பப்   பொருதுவீழ்தலும்,  அரசனேவலின்  தானை
பொருது    வீழ்தலும்,   யானையுங்   குதிரையும்   ஊர்ந்தாரேவலிற்
பொருதலும்,  படையாளர்  ஒருவரொருவர்  நிலை  கூறலும் அவர்க்கு
உதவலுமென இப்பகுதியெல்லாங் கொள்க.

இனி     தாயர் கூறுவன மூதின்முல்லையாம்; மனைவியர் கூறுவன
இல்லாண்முல்லையாம்;   கண்டோர்  கூறுவன  வல்லாண்முல்லையாம்;
பாணர் கூறுவன பாண்பாட்டாம் என்க.

இவை   கூறி ஏனைக் கூத்தர் முதலியோர் கூறுவன கூறார். மனம்
ஞெகிழ்ந்து  போவாரு முளர். அவை ஓரொரு துறையாக முதனூற்கண்
வழங்காமையானும்   அவற்றிற்கு  வரையறை  யின்மையானும்  இவர்
தானைநிலையென  அடக்கினார்.  இச்சிறப்பான் இதனை முற்கூறினார்.
அத்தானை    சூடிய   பூக்கூறலும்,   அதனெழுச்சியும்,   அரவமும்,
அதற்கரசன்  செய்யுஞ்  சிறப்பும்,  அதனைக் கண்டு இடை நின்றோர்
போரை  விலக்கலும்  அவர்  அதற்குடம்படாமைப் போர் துணிதலும்,
அத்தானையுள்   ஒன்றற்கிரங்கலும்,  அதற்குத் தலைவரை வகுத்தலும்,
வேந்தன்  சுற்றத்தாரையுந்   துணை  வந்த அரசரையும் ஏத்துவனவும்,
நும்போர்  எனை நாட்டு என்றலும்,  இரு பெருவேந்தரும் இன்னவாறு
பொருதுமென்று  கையெறிதலும்  போல்வன வெல்லாம் இத்துறைப்பாற்
படும்.

உ-ம்:

‘‘கார்கருதி நின்றதிருங் கௌவை விழுப்பணையான்
சோர்குருதி சூழா நிலனனைப்பப் - போர்கருதித்
துப்புடைத் தும்