ந்தர் புண்டொட்டுக் குருதிச் செங்கைக் கூந்த றீட்டி நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டி ரெடுத்தெறி யனந்தர்ப் பறைச்சீர் தூங்கப் பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்து மறத்தின் மண்டிய விறற்போர் வேந்தர் தாமாய்ந்த னரே குடை துளங் கினவே யுரைசால் சிறப்பின் முரசொழிந் தனவே பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞில மிடங்கெட வீண்டிய வியன்கட் பாசறை களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர வுடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும் பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்ற வுணவி னோரு மாற்ற வரும்பெற லுலக நிறைய விருந்துபெற் றனரால் பொலிகநும் புகழே’’
(புறம்.62)
என வரும்.
செருவகத்து
இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் - போரிடத்தே
தன்வேந்தன் வஞ்சத்தாற் பட்டனாகச்சினங் கொண்ட மனத்தனாய்ப்
பெரும்படைத் தலைவன் தலைமயங்கிப் பொருத நல்ல
புகழைப் பெற்ற நிலைமைக் கண்ணும்; அது குருகுல வேந்தனைக் குறங்கறுத்தஞான்று
இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர்மக்க ளைவரையுங் கொன்று வென்றி கொண்ட
அசுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன.
தன்னரசன் அறப்போரிடத்துப் படாது வஞ்சனையாற் படுதலின்,
அவனுக்குச் சினஞ் சிறந்தது. இச்சிறப்பில்லாத தும்பையும் இக்கலியூழிக்கா மென்பது
‘சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்று’ (தொல். பொ. புற. 15) என்புழிக் கூறிற்று.
உ-ம்:
‘‘மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபி னருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமோ டிரவூ ரறியாது துவரை வேந்தொடு மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக் காவல் பூட்டி யூர்ப்புறக் காவயி னைவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக் கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற் றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத் துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக் கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற் றம்பியர் மூவரு மைம்பான் மருகரு முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக் கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத லமரர் வியந்தனர்
நயந்
|