இன்னும்
அதற்கேயாவதொரு சிறப்பிலக்கணம்
பொதுவகையாற் கூறுகின்றது. மேற்கூறி
வருகின்றாற்போலத் துறைப்படுத்திக் கூறுதற்கேலாத
பரப்புடைச் செய்கை பலவற்றையுந்
தொகுத்து ஒரோவொன்றாக்கி எழுவகைப்படுத்திக்
கூறுதலின்.
(இ-ள்.)
அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் - ஆறு
கூற்றினுட்
பட்ட பார்ப்பியற் கூறும்;
ஆறு
பார்ப்பியலென்னாது ‘வகை’யென்றதனான்
அவை தலை இடை கடையென ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று
கொள்க. அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல்
கொடுத்தல்
கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை
தலையா
ஓத்து; இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப்படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமுந் தருமநூலும் இடையாய ஓத்து; அதர்வம் வேள்வி
முதலிய ஒழுக்கங்கூறாது பெரும்பான்மையும்
உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுஞ்
சூழும் மந்திரங்கள் பயிறலின் அவற்றொடு
கூறப்படாதாயிற்று.
ஆறங்கமாவன,
உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச்
சொல்லை
ஆராயும் நிருத்தமும், அவ்விரண்டையும் உடனாராயும்
ஐந்திரத்
தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம் பாரத்துவாசம் ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலிய கற்பங்களும்,
நாராயணீயம் வராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம்.
தருமநூலாவன, உலகியல்பற்றி
வரும் மனுமுதலிய பதினெட்டும்;
இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின.
இனி, இதிகாச
புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சிநூலும்
அவரவர் அதற்கு மாறுபடக்
கூறும் நூல்களும் கடையாய ஓத்து.
எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன்
தருதலின் அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களும் இடையாய ஓத்தாமென்றுணர்க. இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம்.
இனித் தமிழ்ச்செய்யுட்கண்ணும்
இறையனாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும்
வான்மீகனாருங் கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச்சங்கத்தார் செய்தன
இடையுங், கடைச் சங்கத்தார் செய்தன
கடையுமாக
|