க் கொள்க.
இங்ஙனம்
ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது,
அவற்றின்
சிறப்பையுஞ் சிறப்பின்மையையும் அறிவித்தற்கு.
இவற்றுள் தருக்கமுங் கணிதமும் வேளாளர்க்கும் உரித்தாம்.
இனி
ஓதுவிப்பனவும் இவையேயாகலின்
அவைகட்கும் இப்பகுதி மூன்றும் ஒக்கும்.
ஓதுவித்தலாவது கொள்வோனுணர்வு வகை அறிந்து அவன்
கொள்வரக்
கொடுக்கும் ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுமாம்.
வேட்டலாவது, ஐந்தீயாயினும் முத்தீயாயினும் உலகியற்றீயாயினும் ஒன்று
பற்றி மங்கல மரபினாற் கொடைச்சிறப்புத் தோன்ற அவிமுதலியவற்றை மந்திரவிதியாற் கொடுத்துச் செய்யுஞ் செய்தி. வேளாண்மைபற்றி வேள்வியாயிற்று. வேட்பித்தலாவது, வேள்வி யாசிரியர்க்கோதிய இலக்கணமெல்லாம் உடையனாய், மாணாக்கற்கு
அவன் செய்த வேள்விகளாற் பெரும் பயனைத் தலைப்படுவித்தலை வல்லனாதல். இவை மூன்று பகுதியவாதல் போதாயனீயம்
முதலியவற்றானுணர்க.
கொடுத்தலாவது, வேள்வியாசானும் அவற்குத்
துணையாயினாரும் ஆண்டு வந்தோரும் இன்புறுமாற்றான் வேளாண்மையைச் செய்தல். கோடலாவது, கொள்ளத் தகும் பொருள்களை அறிந்து கொள்ளுதல். உலகு கொடுப்பினும் ஊண் கொடுப்பினும் ஒப்ப நிகழும் உள்ளம் பற்றியுந், தாஞ் செய்வித்த வேள்விபற்றியுங் கொடுக்கின்றான் உவகைபற்றியுங், கொள்பொருளின் ஏற்றிழிவு பற்றியுந், தலை இடை கடையென்பனவுங் கொள்க.
இனி வேட்பித்தன்றித் தனக்கு ஓத்தினாற் கோடலுங் கொடுப்பித்துக்
கோடலுந் தான் வேட்டற்குக் கோடலுந் தாயமின்றி இறந்தோர் பொருள்கோடலும் இழந்தோர் பொருள் கோடலும் அரசு கோடலுந் துரோணாசாரியனைப் போல்வார் படைக்கலங் காட்டிக் கோடலும் பிறவுங்
கோடற்பகுதியாம்.
பார்ப்பியலென்னாது
பக்கமென்றதனானே பார்ப்பார் ஏனை வருணத்துக்கட்கொண்ட பெண்பாற்கட்டோன்றின வருணத்தார்க்குஞ் சிகையும் நூலும் உளவேனும் அவர் இயற்றிற்கெல்லாம் உரியரன்றிச் சிலதொழிற்கு உரியரென்பது கொள்க.
உ-ம்:
‘‘ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்த லீத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி’’
(பதிற்றுப்.24)
இஃது அந்தணர்க்குக் கூறிய பொது.
‘‘முறையோதி னன்றி முளரியோ னல்லன் மறையோதி னானிதுவே வாய்மை - யறிமினோ வீன்றாள் வயிற்றிருந்தே யெம்மறையு மோதினான் சான்றான் மகனொருவன் றான்’’
இஃது ஓதல்.
இனி
|