ஓதற்சிறப்பும் ஓதினாற்கு உளதாஞ் சிறப்புங்
கூறுதல்.
‘‘இம்மை பயக்குமா லீயக் குறைவின்றாற் றம்மை விளக்குமாற் றாமுளராக் கேடின்றா லெம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோல் மம்ம ரறுக்கு மருந்து’’
(நாலடி.132)
‘‘ஆற்றவுங் கற்றா ரறிவுடையாரஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு வேற்றுநா டாகா தமவேயா மாதலா லாற்றுணா வேண்டுவ தில்’’
(பழமொழி)
‘‘ஒத்த முயற்சியா னொத்து வெளிப்படினு நித்திய மாக நிரம்பிற்றே - யெத்திசையுந் தாவாத வந்தணர் தாம்பயிற்றக் காவிரிநாட் டோவாத வோத்தி னொலி’’
இஃது ஓதுவித்தல்.
‘‘எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு’’
(குறள்.424)
இஃது ஓதுவித்தற் சிறப்பு.
‘‘நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த வீரிரண்டி னாறுணர்ந்த வொருமுதுநா லிகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ் துறையு முட்டின்று போகிய வுரைசால் சிறப்பி னுரவோர் மருக வினைக்குவேண்டி நீபூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சைக் சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய மறங்கடிந்த வருங்கற்பின் அறம்புகழ்ந்த வலைசூடிச் சிறுநுதற்பே ரகலல்குற் சிலசொல்லிற் பலகூந்த னினக்கொத்தநின் றுணைத்துணைவியர் தமக்கமைந்த தொழில்கேட்பக் காடென்றா நாடென்றாங் கீரேழி னிடமுட்டா அது நீர்நாண நெய்வழங்கியு மெண்ணாணப் பலவேட்டும் மண்ணாணப் புகழ்பரப்பியும் அருங்கடிப் பெருங்காலை விருந்துற்றநின் றிருந்தேந்துநிலை யென்றுங், காண்கதில் லம்ம யாமே குடாஅது பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந் தண்புனற் படப்பை யெம்மூ ராங்க ணுண்டும் தின்று மூர்ந்து மாடுகஞ் செல்வ லத்தை யானே செல்லாது மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவள ரிமயம் போல நிலீஇய ரத்தைநீ நிலமிசை யானே’’
(புறம்.166)
இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறுங் காண்க.
‘‘ஈன்ற வுலகளிப்ப வேதிலரைக் காட்டாது வாங்கியதா யொத்தானம் மாதவத்தோ - னீந்த மழுவா ணெடியோன் வயக்கஞ்சால் வென்றி வழுவாமற் காட்டிய வாறு.’’
இது பரசுராமனைக் காசிபன் வேட்பித்த பாட்டு.
‘‘நளிகட லிருங்குட்டத்து’’ என்னும்
(26)
|