நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5056
Zoom In NormalZoom Out


புறப்பாட்டினுள்,   அந்தணன்  வேட்பித்தலும்  அரசன்  வேட்டலும்
வந்தன.

‘‘இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள’’              (குறள்.223)

இஃது ஈதல்.

‘‘ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.’’              (குறள்.228)

இஃது ஈதற் சிறப்பு.

‘‘நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டுங்
குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார் - நலங்கிளர்
தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறுபோற்
றாவா தொளிசிறந்த தாம்’’

   (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு.1160.குடிமரபு.10)

இஃது ஏற்றல்.

‘‘தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்’’             (நாலடி.48)

இஃது ஏற்றற் சிறப்பு.

ஓதுவித்தலும் வேட்பித்தலும் ஏற்றலும் அந்தணர்க்கே உரிய.

ஐவகை மரபின் அரசர் பக்கமும் - ஓதல் வேட்டல் ஈதல் காத்தல்
தண்டஞ்  செய்தல்  என்னும் ஐவகையிலக்கணத்தை யுடைய அரசியற்
கூறும்.

‘வகை’ யென்றதனான் முற்கூறிய  மூன்றும்  பொழவும்,  பிற்கூறிய
இரண்டுஞ் சிறப்புமாதல் கொள்க.

பார்ப்பார்க்குரியவாக     விதந்த வேள்வியொழிந்த வேள்விகளுள்
இராசசூயமுந்     துரங்கவேள்வியும்     போல்வன    அரசர்க்குரிய
வேள்வியாம்.   கலிங்கங்   கழுத்து   யாத்துக்   குளம்புங்   கோடும்
பொன்னணிந்த    புனிற்றாநிரையுங்,   கனகமும்   கமுகும்   அன்ன
முதலியனவும்  செறிந்த  படப்பை  சூழ்ந்த  மனையுந், தண்ணடையுங்,
கன்னியரும்,  பிறவுங் கொடுத்தலும், மழுவாணெடியோ னொப்ப  உலகு
முதலியன    கொடுத்தலும்    போல்வன    அவர்க்குரிய   ஈதலாம்.
படைக்கலங்களானும்     நாற்படையானுங்     கொடைத்தொழிலானும்
பிறவாற்றானும்  அறத்தின்  வழாமல்  காத்தல்  அவர்க்குரிய காப்பாம்.
அங்ஙனம்  காக்கப்படும்  உயிர்க்கு  ஏதஞ்செய்யும்  மக்களையாயினும்
விலங்கையாயினும்       பகைத்திறத்தையாயினும்      அறஞ்செய்யா
அரசையாயினும்  விதிவழியான் தண்டித்தல்  அவர்க்குரிய  தண்டமாம்.
இஃது அரசர்க்கு அறமும் பொருளும் இன்பமும் பயக்கும்.

‘வகை’  யென்றதனானே  களவுசெய்தோர்  இருக்கையிற்  பொருள்
கோடலும்,  ஆறிலொன்று  கோடலுஞ், சுங்கங்கோடலும், அந்தணர்க்கு
இறையிலி  கொடுக்குங்கால்  இத்துணைப்பொருள்  நும்மிடத்து   யான்
கொள்வலெனக்   கூறிக்கொண்டு   அதுகோடலும்,  மறம்பொருளாகப்
பகைவர்நாடு  கோடலுந்,  தமரும் அந்தணரும் இல்வழிப்  பிறன்றாயங்
கோடலும்,     பொருளில்வழி      வாணிகஞ்      செய்துகோடலும்,
அறத்திற்றிரிந்தாரைத் தண்டத்திற் றகுமாறு பொருள்