கோடலும்
போல்வன கொள்க. அரசியலென்னாது
‘பக்க’
மென்றதனான் அரசர் ஏனைவருணத் தார்கட் கொண்ட பெண்பாற்கட் டோன்றிய வருணத்துப் பகுதியோருஞ் சில தொழிற்குரிய என்று கொள்.
உ-ம்:
‘‘சொற்பெயர் நாட்டங் கேள்வி
நெஞ்சமென் றைந்துடன் போற்றி யவைதுணை யாக வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி யுருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விருப்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி’’
(பதிற்றுப்.21)
என வரும்.
‘‘கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச் சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல் வேறுபடு திருவி னின்வழி வாழியர் கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் வரையக நண்ணிக் குறும்பொறை நாடித் தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக் கவைமரங் கடுக்குங் கவலைய மருப்பிற் புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற் பருதி போகிய புடைகிளை கட்டி யெஃகுடை யிரும்பி னுள்ளமைத்து வல்லோன் சூடுநிலை யுற்றுச் சுடர்விடு தோற்றம் விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப நலம்பெறு திருமணி கூட்டு நற்றோள் ஒடுங்கீ ரோதி யொண்ணுதல் கருவி லெண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து சால்புஞ் செம்மையு முளப்படப் பிறவுங் காவற் கமைந்த வரசுதுறை போகிய வீறுசால் புதல்வர்ப் பெற்றனை யிவணர்க் கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப அன்னவை மருண்டனெ னல்லே னின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை வண்மையு மாண்பும் வளனு மெச்சமுந் தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபல நனந்தலை பெயரக் கூறினை பெருமநின் படிமை யானே’’
(பதிற்று.74)
எனவும் வருவனவற்றுள் ஓதியவாறும் வேட்டவாறுங்
காண்க.
‘‘ஒருமழுவாள் வேந்த னொருமு வெழுகா லரசடு
வென்றி யளவோ - வுரைசான்ற வீட்டமாம் பல்பெருந்தூ
ணெங்கும் பசுப்படுத்து
|