இயமம்
நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை
பொறைநிலை நினைதல் சமாதி என்னும் எட்டும்
ஆம். இவற்றை,
‘‘பொய்கொலை களவே காமம் பொருணசை யிவ்வகை யைந்து மடக்கிய தியமம்.’’
‘‘பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு நயனுடை மரபி னியம மைந்தே’’
‘‘நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென் றொத்த நான்கி னொல்கா நிலைமையோ டின்பம் பயக்குஞ் சமமே முதலிய வந்தமில் சிறப்பி னாசன மாகும்’’
‘‘உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை’’
‘‘பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமே’’
‘‘மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை’’
‘‘நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற் குறித்த பொருளொடு கொளுத்த னினைவே’’
‘‘ஆங்கனம் குறித்த வாய்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி’’
என்னும் உரைச்சூத்திரங்களா னுணர்க.
‘பக்க’மென்றதனான்,
முட்டின்றி முடிப்போர் முயல்வோர்
என்பனவும்,
‘‘நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி - யூரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி’’
(புற.வெ.வாகை.14)
என்பனவுங் கொள்க.
‘‘ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன குறுந்தொடி மகளி ரிழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகுங் கழைக்க ணெடுவரை யருவி யாடிக் கான யானை தந்த விறகிற் கடுந்தெறற் செந்தீ மாட்டிப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே’’.
(புறம்.251)
எனவும்,
‘‘வைததனையின் சொலாக் கொள்வானு நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானு - ஊறிய கைப்பதனைக் கட்டியென்றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்’’
(திரிகடுகம்.48)
எனவும்.
‘‘ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து’’
(குறள்.126)
எனவும்,
‘‘ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும்’’
(குறள்.370)
எனவும்,
‘‘நீஇ ராட னிலக்கிடை கோடல் தோஒ லுடுத்த ஒள்ளெரி யோம்ப லூரடை யாமை யுறுசடை புனைதல் காட்டி லுணவு கடவுட் பூசை யேற்ற தவத்தி னியல்பென மொழிப’’
எனவும் வரும்.
ஏனைய வந்துழிக்
காண்க.
அறிமரபிற்
பொருநர்கட் பாலும் -
தாந்தாம் அறியும்
இலக்கணங்களானே போர்செய்வாரிடத்துக் கூறுபாடும்;
அவை சொல்லானும்
பாட்டானுங் கூத்தானும் மல்லானுஞ் சூதானும்
பிறவாற்றானும் வேறலாம்.
உ-ம்:
‘‘விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்’’
(குறள்.648)
இது சொல்வென்றி.
‘‘வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள் வெண்டு
|