றையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் - கண்டறியக் கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையா ழந்நரம்பு மச்சுவையு மாய்ந்து’’
(புறப். வெ. ஒழிபு.18)
இது பாடல்வென்றி.
‘‘கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடுந் தொடுகழன் மன்னன் றுடி.’’
(புறப். வெ. ஒழிபு. 17)
இஃது ஆடல்வென்றி.
‘‘இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண் மைந் துடை மல்லன் மதவலி முருக்கி யொருகான் மார்பொதுங் கின்றே யொருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப் போரருந் தித்தன் காண்கதி லம்ம பசித்துப் பணைமுயலும் யானை போல விருதலை யொசிய வெற்றிக் களம்புகு மள்ளற் கடந்தடு நிலையே’’
(புறம்.80)
இது மல்வென்றி,
‘‘கழகத் தியலுங் கவற்றி னிலையு மழகத்
திருநுதலா ளாய்ந்து - புழகத்துப் பாய வகையாற்
பணிதம் பலவென்றா ளாய வகையு மறிந்து’’
(புற. வெ. ஒழிபு. 16)
இது சூதுவென்றி,
அனைநிலை
வகையோடு ஆங்கு எழுவகையின் தொகைநிலை
பெற்றது என்மனார் புலவர் - அக்கூறுபட்ட ஆறுபகுதியும் நிலைக்களமாக அவற்றுக்கண் தோன்றிய வேறுபட்ட கூறுபாட்டோடு முன்னைய ஆறுங் கூட்டி அவ்வெழுகூற்றான் துறை பல திரண்ட தொகை பெற்றது அவ்வாகைத்திணை என்று கூறுவா ராசிரியர்
எ-று.
அனையென்றது சுட்டு. நிலை - நிலைக்களம். நிலையது வகை. ஆங்கென்றதனை ‘அனைநிலைவகையோ’ டென்பதன்கண் வகைக்கு முன்னே கூட்டுக. ஓடு எண்ணிடைச் சொல்லாதலின் முன் னெண்ணிய வற்றொடு கூட்டி ஏழாயிற்று.
இனிப் பார்ப்பனப்பக்கத்து வகையாவன பார்ப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்துக்
கற்புநிகழ்வதற்கு முன்னே களவில் தோன்றினானும், அவள் பிறர்க்குரியளாகிய
காலத்துக் களவில் தோன்றினானும், அவள் கணவனை இழந்திருந்துழித்
தோன்றினானும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும்
இவ்வாறே தோன்றினாரும், அவரவர் மக்கட்கண் அவ்வாறே பிறழத்
தோன்றினாருமாகிய சாதிகளாம். இன்னோருந் தத்தந் தொழில்வகையாற்
பாகுடப மிகுதிப்படுத்தல் வாகைத் திணையாம். ஒழிந்த பகுதி ஐந்தற்கும் இஃதொக்கும்.
இன்னும் பெண்பாலுயர்ந்து ஆண் பாலிழிந்தவழிப் பிறந்த
சாதிகளும் அனைநிலைவகைப் பாற்படும். யோகிகளாய் உபாயங்களான்
முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனை நிலைவகையோராவர்;
|