இது மேல் தொகுத்துக்
கூறிய எழுவகைத் திணையுள் அடங்காத வற்றிற்கு
முற்கூறிய துறைகளே போலத் தொடர்
நிலைப்படுத்தாது மறத்திற்கு
ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதுமாக
இருவகைப்படுத்துத் துறை கூறுகின்றது.
(இ-ள்.)
கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் - கூதிரெனவும் வேனிலெனவும் பெயர்பெற்ற இருவகைப் பாசறைக்கண்ணுங் காதலால் திரிவில்லாத மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழில் கருதிய மரபானும்;
கூதிர், வேனில்
ஆகுபெயர். அக்காலங்களிற் சென்றிருக்கும் பாசறையாவது தண்மைக்கும் வெம்மைக்குந் தலைமைபெற்ற
காலத்துப் போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போந்திருத்தல். இக் காலங்களிற் பிரிதல் வன்மையின் இது வென்றியாயிற்று. தலைவி மேற் காதலின்றிப் போரின்மேற் காதலின் சேறலின்
‘ஒன்றி’யென்றார். இக்காலத்துச் சிறப்புப்
|