டினகுரவைக்
கூத்து’’ (பெரும் பொருள் விளக்கம்.
புறத்திரட்டு.1430.களம்.12)
என வரும்,
‘‘களிற்றுக் கோட்டன்ன வாலெயி றழுத்தி விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் குடர்த்தலைத் துயல்வரச் சூடிப் புணர்த்தின மானாப் பெருவளஞ் செய்தோன் வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலவென வுருகெழு பேஎய்மக ளயரக் குருதித்துக ளாடிய களங்கிழ வோயே’’
(புறம்.371)
என்பதும் அது.
பெரும்பகை
தாங்கும் வேலினானும் -
போர்க்கணன்றியும் பெரியோராகிய பகைவரை
அத்தொழிற்சிறப்பான் அஞ்சுவித்துத் தடுக்கும்
வேற்றொழில் வன்மையானும்;
காத்தற்றொழிலன்றி
அழித்தற்றொழில் பூண்ட முக்கட் கடவுட்குச்
சூலவேல் படையாதலானும் முருகற்கு வேல் படையாதலானுஞ் சான்றோர் வேற்படையே சிறப்பப் பெரும் பான்மை கூறலானும் வேலைக் கூறி ஏனைப்
படைகளெல்லாம்.
‘‘மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியா ததனையு முட்டின்று முடித்தல்’’
(தொல். பொ. மர.110)
என்னும் உத்தியாற் பெறவைத்தார்.
உ-ம்:
‘‘குன்று துகளாக்குங் கூர்ங்கணையான் வேலெறிந் தன்று திருநெடுமா லாடினா - னென்றும் பனிச்சென்று மூளாத பல்கதிரோன் சேயோ டினிச்சென் றமர்பொரா யென்று’’
இது பாரதம்.
‘‘இரும்புமுகஞ் சிதைய நூறி யொன்னார் அருஞ்சமங் கடத்த லேனோர்க்கு மெளிதே நல்லரா வுறையும் புற்றம் போலவுங் கொல்லேறு திரிதரு மன்றம் போலவும் மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை யுளனென வரூஉ மோரொளி வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே’’
(புறம்.309)
என்பதும் அது.
‘‘இவ்வே, பீலியணிந்து’’
என்னும் (95) புறப்பாட்டும் அது.
அரும்பகை
தாங்கும் ஆற்றலானும் - வெலற்கரும்
பகைவர் மிகையை நன்கு மதியாது எதிரேற்றுக்கொள்ளும்
அமைதியானும்;
உ-ம்:
‘‘எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாண ருண்டுகடை தப்பலி னொக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச் சிறுபுல் லாளர் முகத்தவை கூறி வரகுகட னிரக்கு நெடுந்தகை யரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே’’
(புறம்.327)
என வரும்.
‘‘களம்புக லோம்புமின்’’
என்னும் (87) புறப்பாட்டும் அது.
வாழ்க்கை
புல்லா வல்லாண் பக்கமும் - உயிர்வாழ்க்கையைப்
பொருந்தாத வலிய ஆண்பாலின் கூறுபாட்டானும்;
‘பக்க’மென்றதனாற்
தாபதப்பக்கமல்லாத போர்த்தொழிலாகிய
வல்லாண்மையே கொள்க.
உ-ம்:
|