டே ருடையோர்க்
கரசரோ வொப்பு’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1159.குடிமரபு.9)
‘‘எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறைய னென்றனி ராயி னாறுசெல் வம்பலிர் மன்பதை மருள வரசுகளத் தவியக் கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை மீபிணத் துருண்ட தேயா வாழியிற் பண்ணமை தேரு மாவு மாக்களு மெண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி யுகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச் சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்கர் ஆபரந் தன்ன செலவிற்பல் யானை காண்பலவன் றானை யானே’’
(பதிற்றுப்.77)
என்பதும் அது.
கட்டில் நீத்த
பாலினானும் - அரசன் அரசவுரிமையைக் கைவிட்ட
பகுதியானும்;
அது பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த
வென்றி.
உ-ம்:
‘‘கடலு மலையுந் தேர்படக் கிடந்த மண்ணக வளாக நுண்வெயிற் றுகளினு நொய்தா லம்ம தானே யிஃதெவன் குறித்தன னெடியான் கொல்லோ மொய்தவ வாங்குசிலை யிராமன் றம்பி யாங்கவ னடிபொறை யாற்றி னல்லது முடிபொறை யாற்றலன் படிபொறை குறித்தே.’’
இஃது அரசு கட்டினீத்த பால்.
‘‘பரிதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநில மொருபக லெழுவ ரெய்தி யற்றே வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக் கையவி யனைத்து மாற்றா தாதலிற் கைவிட் டனரே காதல ரதனால் விட்டோரை விடாஅ டிருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே’’
(புறம்.358)
என்பதும் அது.
எட்டுவகை நுதலிய
அவையத்தானும் - எண்வகைக் குணத்தினைக்
கருதிய அவையத்தாரது நிலைமையானும்;
அவை
குடிப்பிறப்பு கல்வி ஒழுக்கம் வாய்மை தூய்மை நடுவு நிலைமை அழுக்காறின்மை அவாவின்மை என விவை யுடையராய், அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக்
கூறுதல்.
உ-ம்:
‘‘குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற் காத லின்பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலு மழுக்கா றின்மை யவாஅ வின்மையென விருபெரு நிதியமு மொருதா மீட்டுந் தோலா நாவின் மேலோர் பேரவை யுடன் மரீஇ யிருக்கை யொருநாட் பெறுமெனிற் பெறுக தில் லம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பவிம் மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே’’
(ஆசிரியமாலை.புறத்திரட்டு.827.அவையறிதல் 11)
என இதனுள் எட்டும் வந்தன.
கட்டமை ஒழுக்கத்துக்
கண்ணுமையானும்-
|