இது
முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணம் கூறுகின்றது.
(இ-ள்.)
பாங்கருஞ் சிறப்பின் - தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக;
பல்லாற்றானும். அறம் பொருள் இன்பமாகிய பொருட்பகுதியானும்
அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையுஞ் செல்வமும் இளமையும் முதலியவற்றானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்து - நிலைபேறில்லாத உலகியற்கையைப்
பொருந்திய நன்னெறியினை யுடைத்துக் காஞ்சி
எ-று.
எனவே, வீடுபேறு
நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர்
சாற்றுங் குறிப்பினது காஞ்சியாயிற்று. பாங்கு. துணை.
உலகிற்கு நிலையாமை கூறுங்கால் அறமுதலாகிய பொருட்பகுதி ஏதுவாகக்
கூறினன்றி உலகென்பதற்கு வடிவு வேறின்மையிற் ‘பல்லாற்றானு’மென்று ஆன் உருபு கொடுத்தார். கெடுங்காற் கணந்தோறுங்
கெடுவனவுங் கற்பந்தோறுங் கெடுவனவுமா மென்றற்கு ஆறென்றார். நிலைபெற்ற வீட்டினான் இவற்றின் நிலையாமை யுணர்தலின்
வீடு ஏதுவாயிற்று. பல்லாற்றானுமென்றதனாற் சில்லாற்றானும் வீடேது
வாகலன்றி நிலையாமைக் குறிப்பு ஏதுவாகலுங் கொள்க. இஃது அறி
|