வன்
தேயமுந் தாபதப்பக்கமும் பற்றி
நிலையின்மைக் குறிப்புப் பெற்றாம்.
உ-ம்:
‘‘மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக வியங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப் பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப் பொருநர்க் காணாச் செருமிகு மொய்ம்பின் முன்னோர் செல்லவுஞ் சொல்லா தின்னும் விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற வுளனே வாழியர் யானெனப் பன்மா ணிலமக ளழுத காஞ்சியு முண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே’’
(புறம்.365)
இதனுள் ‘உண்டென
உரைப்பரால் உணர்ந்தோ’ ரென்றலின் வீடுபேறு ஏதுவாகத் தாபதர் போல்வார்க்கு நில்லா
உலகம் புல்லியதாயிற்று. வீடுபேறு நிமித்தமாகச் சான்றோர்
பல்வேறு நிலையாமையை அறைந்த மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம்.
(23)
நிலையின்மைப் பொருள்களை
வகுத்தோதுதல்
|