நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5077
Zoom In NormalZoom Out


பொருந்திய
தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தன் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே’’      (புறம்.73)

‘‘நகுதக்  கனரே  நாடுமீக்  கூறுநர்’’  ‘‘மடங்கலிற் சினைஇ’’
என்னும்  (72,  71)  புறப்பாட்டுக்கள்  உயிருஞ் செல்வமும் போல்வன
நிலையும் பொருளென நினையாது வஞ்சினஞ் செய்தன.

இன்னகை  மனைவி   பேஎய்ப்   புண்ணோற்  றுன்னுதல் கடிந்த
தொடாஅக்  காஞ்சியும் - இனிதாகிய நகையினையுடைய மனைவி தன்
கணவன்   புண்ணுற்றோனைப்   பேய்  தீண்டுதலை  நீக்கித்  தானுந்
தீண்டாத காஞ்சியானும்;

என்றது,   நகையாடுங்    காதலுடையாள்,   அவனைக்   காத்து
விடிவளவுஞ்  சுற்றுதலன்றி முயங்குதற்கு உள்ளம் பிறவாதபடி அவன்
நிலையாமையை எய்தினானென்றவாறு.

இதுவும் ஆண்பாற்காஞ்சியாம். இக் காஞ்சியென்பதனை  முன்னும்
பின்னுங் கூட்டுக.

‘‘தீங்கனி யிரவமொடு வேம்பு மனைச்செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கப்
பையப் பெயர்த்து மையிழு திழுகி
யையவி சிதறி யாம்ப லூதி
யிசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே’’  (புறம்.281)

என வரும்.

நீத்த   கணவற்   றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி ஆஞ்சியானும்
-உயிர்நீத்த  கணவன்  தன்னுறவை  நீக்கின வேல்வடுவாலே மனைவி
அஞ்சின ஆஞ்சிக்காஞ்சியானும்;

எஞ்ஞான்றும்   இன்பஞ்செய்த கணவனுடம்பு அறிகுறி தெரியாமற்
புண்பட்டு  அச்சம்  நிகழ்தலின்,  யாக்கை  நிலையாமை  கூறியதாம்.
பேஎத்த  என்பது  உரிச்சொன் முதனிலையாகப் பிறந்த பெயரெச்சம்.
அஞ்சின, ஆஞ்சி யென நின்றது.

‘‘இன்ப முடம்புகொண் டெய்துவிர் காண்மினோ
வன்பி னுயிர்புரக்கு மாரணங்கு தன்கணவ
னல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே
புல்லார்வேர் மெய்சிதைத்த புண்’’

       (தகடூர்யாத்திரை.புறத்திரட்டு.1405.மூதின் மறம்.82)

என வரும்.

இனி  ‘வேலிற்   பெயர்த்த   மனைவி’    யென்று   பாடமோதி,
அவ்வேலான் உயிரைப் போக்கின மனைவி யென்றுகூறி, அதற்குக்

‘‘கௌவைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோ - னவ்வேலே
யம்பிற் பிறழுந் தடங்க ண