வன்காதற கொம்பிற்கு மாயிற்றே கூற்று’’
(புறம். வெ. காஞ்சி.23)
என்பது காட்டுப.
நிகர்த்து
மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும் - பெண்கோளொழுக்கத்தினொத்து மறுத்தல் பற்றிப் பகைவனாய் வலிந்துகோடற்கு எடுத்துவந்த, அரசனொடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளருந் தத்தம் மகளிரைப்
படுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியானும்;
வேத்தியலாவது உயிர்போற்றாது வாழ்தலின், அவரது நிலையின்மை நோக்கி, அவரோடொத்து மகளிரைப் படுத்தற் கஞ்சி மறுப்பாராதலின் ‘அஞ்சிய’வென்றும், ‘மேல்வந்த’ வென்றுங் கூறினார்.
அம்முதுகுடிகள் தாம் பொருது படக் கருதுதலின் உயிரது நிலையாமை உணர்ந்த காஞ்சியாயிற்று.
பாலென்றதனான்
முதுகுடிகளேயன்றி ‘அனைநிலைவகை’
யெனப்பட்டார்கண்ணும் (தொல். புறத்திணை 20) இத்துறை நிகழ்தல் கொள்க.
உ-ம்:
‘‘நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையு நெடிய வல்லது பணிந்துமொழி யலனே இஃதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மரம்படு சிறுதீப் போல அணங்கா யினள்தான் பிறந்த வூர்க்கே’’
(புறம்.349)
என வரும்.
‘‘களிறணைப்பக் கலங்கின காஅ தேரோடத் துகள்கெழுமின தெருவு மாமறுகலின் மயக்குற்றன வழி கலங்கழா அலிற் றுறை, கலக்குற்றன தெறன்மறவ ரிறைகூர்தலிற் பொறைமலிந்து நிலனெளிய வந்தோர் பலரே வம்ப வேந்தர் பிடியுயிர்ப் பன்ன கைகவ ரிரும்பி னோவுற ழிரும்புறங் காவல் கண்ணிக் கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை மைய னோக்கிற் றையலை நயந்தோ ரளியர் தாமேயிவ டன்னை மாரே செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக் கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர் குழா அங் கொண்ட குருதியும் புலவொடு கழாஅத் தலைய கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த் தாயினு மன்னோ என்னா வதுகொ றானே பன்னல் வேலியிப் பணைநல் லூரே’’
(புறம்.345)
இதனுள் ‘‘நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென’’
|