ழந்த தபுதார
நிலையானும்;
என்றது தாரமிழந்த
நிலை - தன் காதலியை இழந்தபின் வழிமுறைத்தாரம்
வேண்டின், அது காஞ்சிக் குறிப்பன்று என்றற்கும், எஞ்
ஞான்றும் மனைவியில்லாதானுந் தபுதார நிலைக்கு உரியனா யினும், அது காஞ்சியாகாதென்றற்குந்,
தபுதார நிலையென்றே பெயர்பெறுதன் மரபென்றற்குங், ‘காதலியிழந்த நிலை’யுமென்றே
ஒழியாது, பின்னுந் தபுதார நிலையு மென்றார். தலைவர் வழிமுறைத்
தாரமும் எய்துவாராதலின் அவர்க்கு நிலையாமை
சிறப்பின்மையின் ஆண்பாற் காஞ்சியன்றாயிற்று.
இஃது யாக்கையும் இன்பமும்
ஒருங்குநிலையின்மையாம்.
உ-ம்:
‘‘யாங்குப் பெரிதாயினு நோயள வெனைத்தே யுயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற் கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத் தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனண் மடந்தை யின்னும் வாழ்வ லென்னிதன் பண்பே’’
(புறம்.245)
என வரும்.
காதலன் இழந்த
தாபதநிலையும் - காதலனை யிழந்த மனைவி தவம்
புரிந்தொழுகிய நிலைமையானும்;
இருவரும்
ஓருயிராய்த் திகழ்ந்தமையின்
உயிரும் உடம்பும்
இன்பமுஞ் செல்வமும் ஒருங்கிழந்தாள் தலைவியேயாம்.
இதனை இல்லறம் இழத்தலின்
அறநிலையின்மை அமையுமென்ப.
உ-ம்:
‘‘அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையா யினவே யினியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும் அல்லிப் படூஉம் புல்லா யினவே’’
(புறம்.248)
என வரும்.
நல்லோள்
கணவனொடு நனியழற் புகீஇச்
சொல்லிடையிட்ட பாலைநிலையும் - கற்புடைய மனைவி தன் கணவன் இறந்துபட அவனோடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு உறழ்ந்து கூறிய புறங்காட்டு
நிலையானும்;
எல்லாநிலத்தும்
உளதாகித் தனக்கு வேறு நிலனின்றி வருதலானும்
நண்பகல்போல் வெங்கனலான் வெதுப்புதலானும் புறங்காட்டைப்
‘பாலை’ யென்றார்; பாலைத்தன்மை எய்திற்று என்றற்கு ‘நிலை’யென்றார்.
உ-ம்:
‘‘பல்சான் றீரே பல்சான் றீரே செல்கெனச் சொல்லா
தொழிகென
|