நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5083
Zoom In NormalZoom Out


விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
யணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டாது
அடகிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியு
முயவற் பெண்டிரே மல்லே மாதோ
பெருங்கோட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம்
நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்மையுந் தீயுமோ ரற்றே’’      (புறம்.246)

என வரும்.

மாய்பெருஞ்   சிறப்பிற்  புதல்வன்  பெயரத்  தாய்  தப  வரூஉம்
தலைப்பெயல்  நிலையும்.  பொருகளத்துப்  பொருது  மாயும்  பெருஞ்
சிறப்பிற்   றீர்ந்து  தன்மகன்  புறங்கொடுத்துப்  போந்தானாக,  அது
கேட்டுத்   தாய்   சாக்காடு   துணிந்து   சென்று   மகனைக்  கூடுங்
கூட்டமொன்றானும்;    இனி    அவன்    பிறர்சிறப்பு   மாய்தற்குக்
காரணமாகிய  பெருஞ்சிறப்பொடு  களப்பட்டுத் துறக்கத்துப் போயவழி
அவனோடு       இறந்துபட      வரும்      தாயது      தலைப்
பெயனிலைமையொன்றானும்;

‘இவ்   விருகூறும்   உய்த்துக்கொண்டுணர்த   லென்னும்  உத்தி.
‘நிலை’யென்றதனான் அவள் இறந்துபடாது மீடலுஞ் சிறுபான்மை யாம்
காஞ்சி யென்று கொள்க. அஃது அன்பிற்கு நிலையின்மையாம்.

உ-ம்:

‘‘வாதுவல் வயிறே வாதுவல் வயிறே
நோவே னத்தை நின்னீன் றனனே
பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி
யக்களத் தொழிதல் செல்லாய் மிக்க
புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃகம்
அதன்முகத் தொழிய நீபோந் தனையே
யதனா, லெம்மில் செய்யாப் பெரும்பழி செய்த
கல்லாக் காளையை யீன்ற வயிறே’’

        (தகடூர்யாத்திரை.புறத்திரட்டு.1407.மூதின்மறம்.4)

இத் தகடூர்யாத்திரை கரியிடை வேலொழியப்  போந்ததற்குத்  தாய்
தப வந்த தலைப்பெயனிலை.

‘‘எற்கொண் டறிகோ வெற்கொண் டறிகோ
வென்மக னாத லெற்கொண் டறிகோ
கண்ணே கணைமூழ் கினவே தலையின்
வண்ண மாலையும் வாளிவிடக் குறைந்தன
வாயே, பொங்கு நுனைப் பகழி மூழ்கலிற் புலர்வழித்
தாவ நாழிகை யம்புசெறிந் தற்றே
நெஞ்சே வெஞ்சரங் கடந்தன குறங்கே
நிறங்கரந்து பலசரம் நிரைத்தன வதனா
லவிழ்பூ வப்பணைக் கிடந்