தோன் கமழ்பூங்
கழற்றீங் காய்போன் றனனே’’
இத் தகடூர்யாத்திரை
துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கேரளன் தாய்
இறந்துபட்ட தலைப்பெயனிலை.
‘‘நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோண் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறின னென்றுபலர் கூற மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே’’
(புறம்.278)
இப் புறப்பாட்டு மீண்டது.
‘‘ஈன்று புறந்தருதல்’’ என்னும் (312) புறப்பாட்டும் அது.
மலர்தலை
உலகத்து மரபு நன்கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு-அகன்ற இடத்தினையுடைய உலகங்களிடத்து வரலாற்று முறைமையினைப் பலரும் பெரிதுணரும்படியாகப் பிறந்தோரெல்லாரும் இறந்துபோகவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டினை
வாழ்த்துதலானும்;
உ-ம்:
‘‘உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப் பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு புலவுங்கொ லென்போல் புலவுக் களத்தோ டிகனெடுவே லானை யிழந்து’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1439.இரங்கல்4)
என வரும்.
‘‘களரி பரந்து கள்ளி போகிப் பகலுங் கூஉங் கூகையொடு பிறழ்பல் ஈம விளக்கிற் பேஎய் மகளிரோ டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு நெஞ்சமர் காதல ரழுத கண்ணீ ரென்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து மன்பதைக் கெல்லாந் தானாய்த் தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே’’
(புறம்.356)
இதுவும் அது.
தொகைஇ ஈரைந்து
ஆகுமென்ப - தொகைபெற்றுக் காஞ்சி பத்துவகைப்படுமென்று கூறுவர் ஆசிரியர்; நிறையருஞ் சிறப்பிற் றுறை இரண்டு உடைத்தே - ஆதலான் அக்காஞ்சி நிறுத்தற்கு எதிர் பொருளில்லாத பெரிய சிறப்பினையுடைய ஆண்பாற்றுறையும் பெண்பாற்றுறையுமாகிய இரண்டு துறையினையுடைத்து
எ-று.
எனவே, முற்கூறிய
பத்தும் இப்பத்துமாக இருபதென்பதுங் கூறினாராயிற்று. ‘நிறையருஞ் சிறப்பெ’ன்றதனானே மக்கட்குந் தேவர்க்கும் உள்ள நிலையாமையே காஞ்சிச்
சிறப்புடைத்தாகக் கூறப்படுவது; ஏனை அஃறிணைப்பகுதிக்கணுள்ள
நிலையாமை காஞ்சிச் சிற
|