க் கஃதுடை முன்னரைபோல் வேந்தூர் முனைப்புலம்பு முன்னிரையும் வீசி - யெனைப்புலத்துஞ் சென்றது நின்சீர்த்தி தேர்வளவ தெவ்வர்போ னன்றுமுண்
டாக நமக்கு’’
இது கூற்றுவகையானன்றிக் குறிப்புவகையான் ஒன்று பயப்பானாக்கி நினைத்துரைத்தலின்
வெட்சியும் வாகையும் வந்த பாடாண்டிணையாம்.
‘‘அவலெறி வுலக்கை வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த தடந்தா ணாரை இரிய வயிரைக் கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்பு மழியா விழவி னிழியாத் திவவின் வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்ற நண்ணி மறுகுசிறை பாடு மகன்கண் வைப்பி னாடும னளிய விரவுவேறு புலமொடு குருதி வேட்ட மயிர்புதை மாக்கண் கடிய கழற வமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும் பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பி றானை பரவா வூங்கே’’
(பதிற்றுப்.29)
இதில் இமையவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார்
துறக்கம் வேண்டினாரென்பது குறிப்பு வகையாற் கொள்ள வைத்தலின் இது வஞ்சிப்பொருள் வந்த
பாடாணாயிற்று.
‘‘இலங்கு
தொடிமருப்பின்’’ என்னும் பதிற்றுப்பத்து உள்ளியது
முடிக்கும் வேந்தனது சிறப்பாகிய உழிஞையாயினும் பதின் துலாம் பொன் பரிசில் பெற்றமையிற் பாடாணாயிற்று.
‘‘பார்ப்பார்க் கல்லது பணியறி யலையே பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம் மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலை யாயினுங் கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக் கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக் குன்றுநிலை தளர்க்கு முருமிற் சீறி யொருமுற் றிருவ ரோட்டிய வொள்வாள் செருமிகு தானை வெல்போ ரோயே யாடுபெற் றழிந்த மள்ளர் மாறி நீகண் டனையே மென்றனர் நீயு நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற் செல்வக் கோவே சேரலர் மருக காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனி னடையடுப் பறியா அருவீ யாம்ப லாயிர வெள்ள வூழி வாழி யாத வாழிய பலவே’’
(பதிற்றுப்.63)
இது வாகைத் துறைப் பாடாண்பாட்டு.
இப்
பதிற்றுப்பத்து நூறும்இவ்வாறே வருதலிற் பாடாண்டிணையேயாயிற்று.
|