இது முன்னர்
எட்டெனப் பகுத்த பாடாண்டிணையுள் ஏழொழித்துத்
தன் பொருட்பகுதிகள் எல்லாங் கூடி
ஒன்றாமென்ற பாடாண்டிணை தேவரும்
மக்களுமென இருதிறத்தார்க்கே
உரிய என்பார் அவ்விரண்டினுள்
தேவர்பகுதி இவையென்ப துணர்த்துகின்றது.
(இ-ள்.)
அமரர்கண் முடியும் அறுவகையானும்
- பிறப்பு வகையானன்றிச் சிறப்புவகையான் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை
வாழ்த்தின்கண்ணும்; புரைதீர் காமம் புல்லிய வகையினும் - அத்தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருள்களை வேண்டுங்
குறிப்புப் பொருந்தின பகுதிக்கண்ணும்; ஒன்றன் பகுதி ஒன்றும்
என்ப - மேற்பாடாண் பகுதியெனப் பகுத்து வாங்கிக்கொண்ட ஒன்றனுள் தேவரும் மக்களுமெனப் பகுத்த இரண்டனுள் தேவர்க்கு உரித்தாம் பகுதியெல்லாந் தொக்கு ஒருங்குவருமென்று கூறுவார் ஆசிரியர் எ-று.
அமரர்கண்ணே
வந்து முடியுமெனவே அமரர் வேறென்பதூஉம் அவர்கண்ணே வந்து
முடிவன வேறென்பதூஉம் பெற்றாம். அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை
வேந்தரும் உலகுமாம். இவை தத்தஞ் சிறப்பு வகையான் அமரர்சாதிப் பால வென்றல் வேதமுடிவு. இதனானே பிறப்பு முறையாற் சிறந்த அமரரை வாழ்த்தலுஞ் சொல்லாமையே முடிந்தது தந்திரவுத்தி
வகையான். ‘வகை’யென்றதனானே அமரரை வேறு வேறு பெயர்
கொடுத்து வாழத்தலும் ஏனைப் பொதுவகையாற் கூறி வாழ்த்தினன்றிப் பகுத்துக் கூறப்படாமையுங் கொள்க. ‘புரை’ உயர்ச்சியாதலின் உயர்ச்சியில்லாத காமமாவது மறுமைப்பயன் பெறுங் கடவுள்வாழ்த்துப் போல் உயர்ச்சியின்றி இம்மையிற் பெறும்பயனாதலின், இழிந்த
பொருள்களிற் செல்லும் வேட்கைக் குறிப்பு. ‘புல்லிய வகை’ யாவது, அம்மனக்குறிப்புத் தேவர்கண்ணே பொருந்திய கூறாது தன் பொருட்டானும் பிறன்பொருட்டானும் ஆக்கத்துமேல்
ஒருவன் காமுற்றவழி அவை அவற்குப் பயன்கொடுத்தலாம். இது
ஒன்றனுடைய பகுதியென்க. இத்துணைப் பகுதியென்று இரண்டிறந்தன
கூறாது, வாளாதே பகுதி யென்றமையின் தேவரும் மக்களுமென இரண்டே யாயிற்று, அத்தேவருட் பெண்டெய்வங் ‘கொடிநிலை கந்தழி’
(88) என்புழி அடங்கும். மக்களுட் பெண்பால்
பாடுதல் சிறப்பின்மையிற்
|