இது மேல் ‘ஒன்றன்பகுதி’
(தொல். புறத்திணை 26) என்புழித் தோற்றுவாயாகச் செய்த இருபகுதியுள் மக்கட் பகுதி கூறுகின்றது.
(இ-ள்.)
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் - ஒரு
தலைவன்
தன்னைப் பிறர் வாழ்த்துதலும் புகழ்ந்துரைத்தலுங் கருதிய பக்கத்தின்கண்ணும்;
வகைபட முன்னோர் கூறிய குறிப்பினும் - அறம் பொருளின்பங்களின்
கூறுபாடு தோன்ற முன்னுள்ளோர் கூறிய குறிப்புப் பொருளின்கண்ணும்;
செந்துறை நிலைஇ - செவ்வனம் கூறுந் துறை நிலைபெற்று; வழங்குஇயல் மருங்கின்.
வழங்குதல் இயலுமிடத்து; ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்று -
அச்செந்துறைக் கண் வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கு நிலைமையின்று எ-று.
பரவல்
முன்னிலைக்கட் பெரும்பான்மை
வரும். பரவலும் புகழ்ச்சியுந் தலைவன் கண்ணவாய்ப் பரிசில் பெறுதல்
பாடுவான் கண்ணதாகலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குப்
புறனாயிற்று. முன்னோர் கூறிய குறிப்பும் பாடப்படுவோன்கண்
வேட்கையின்மையிற் கைக்கிளையாம். குறிப்பென்றார், அறம்பொருள் இன்பம்
பயப்பச் செய்த செய்யுளைக் கேட்டோர்க்கும் அஃது
உறுதிபயத்தலைக் குறித்துச் செய்தலின். செந்துறையாவது, விகாரவகையான்
அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது உலகினுள்
இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்துறைப்
பாடாண் பாட்டெனப்படும்.
‘‘வண்ணமுந்
துணையும் பொரீஇ யெண்ணா’’(பத்துப்.குறிஞ்சிப்.31)
என்பவாகலானும், ஐவகை நிறத்தினையும் வண்ண மென்பவாகலானும், வண்ணமென்பது இயற்சொல்;
வருண மென்பது வடமொழித் திரிபு. ‘ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்’றெனவே
வருகின்ற காமப்
பகுதியிடத்து வண்ணப்பகுதி வரையப்
|