படுமாயிற்று;
கைக்கிளைக் கிழத்தியை உயர்ந்தோன் வருணத்துப் படுத்துக் கூறாதது, ‘அனைநிலை’
(தொல்.புறத்திணை20) வருணத்துப்படுத்துத்
தோன்றக் கூறலின்.
உ-ம்:
‘‘நிலநீர் வளிவிசும் பென்ற நான்கி னளப்பரி யையே நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழ லைந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை யக்குர னனைய கைவண் மையையே அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீ டழித்த செருப்புகன் முன்ப கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே யெழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ பல்களிற்றுத் தொகுதியொடு வெல்கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேந்தே யிலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின் முன்றிணை முதல்வர் போல நின்றுநீ கெடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே’’
(பதிற்றுப்.14)
பரவற்கண்
வந்த செந்துறைப் பாடாண்பாட்டு;
இதனை
வாழ்த்தியலென்பர்.
‘‘வரைபுரையு மழகளிற்றின்மிசை வான்றுடைக்கும் வகையபோல விரவுருவின கொடிநுடங்கும் வியன்றானை விறல்வேந்தே நீ, யுடன்று நோக்கும்வா யெரிதவழ நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச் செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் வெண்டிங்களுள் வெயில்வேண்டினும் வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின் நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த வெம்மள வெவனோ மற்றே யின்னிலைப் பொலம்பூங் காவி னன்னாட் டோருஞ் செய்வினை மருங்கி னெய்த லல்லதை யுடையோ ரீதலு மில்லோ ரிரத்தலுங் கடவ தன்மையிற் கையற வுடைத்தென ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின் நின்னா டுள்ளுவர் பரிசில ரொ
|