ன்னார் தேஎத்து
நின்னுடைத் தெனவே’’ (புறம்.38)
இது
புகழ்ச்சிக்கண் வந்த
செந்துறைப் பாடாண்பாட்டு.
இயைபியன்மொழி யென்பதும் அது.
‘‘உண்டா லம்மலிவ் வுலக மிந்திர ரமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி னுலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்வில ரன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுந ருண்மை யானே’’
(புறம்.182)
இது வகைபட
முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப்
பாடாண்பாட்டு.
இது முனிவர்
கூறுமாறு போலக் கூறிப் பரவலும் புகழ்ச்சியுங்
கூறாது மறுமைப்பயன் பிறர்க்குறுதி பயப்பக் கூறலிற் கைக்கிளைப் புறனாய்ப்
பாடாணாயிற்று.
இவை செந்துறை
மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென்பதூஉம்
வெண்டுறை மார்க்கமாகிய நாடகத்துள் அவிநயத்துக் குரியவாகி
வருமென்பதூஉங் கூறின், அவை ஈண்டுக் கூறல் மயங்கக் கூறலாம். அன்றியும் ஏனை அறுவகைத் திணைக்கும் இங்ஙனங் கூறாது இத்திணைக்கே உரித்தாகக் கூறுதற்கொரு காரணமின்மையானும் அங்ஙனங் கூறாரென்ப.
பரவலும் புகழ்ச்சியும் அவ்வப் பொருண்மை கருதினாரைத்
தலைவராக வுடைமையானும்,
ஏனையது அக்குறிப்பிற்றன் றாகலானும்,
அதற்குப் பாட்டுடைத் தலைவர் பலராயினும் ஒருவராயினும் பெயர்கொடுத்துங்
கொடாதுங் கூறலானும் வேறு வைத்தாரென்க. இத்துணை
வேறுபாடுடையதனைப் பரவல் புகழ்ச்சியொடு கூடவைத்தார், அவை முன்னோர் கூறிய குறிப்பினுள்ளும் விராய்வரும் என்றற்கு.
இன்னும் அதனானே பாடாண்டிணைப் பொருண்மை மயங்கிவரினும்
முடிந்த பொருளாற் பெயர் பெறுமென்று கொள்க.
‘‘நிலமிசை
வாழ்நர்’’ என்னும் (43) புறப்பாட்டுப் புலவன் அரசனை வைது ஆறியது நன்குரைத்தல். அஃது
இயற்கை வகையானன்றிச் செயற்கை வகையாற் பரவலும் புகழ்ச்சியுந்
தொடர்ந்த முன்னோர் கூறிய குறிப்பு.
இன்னும் மயங்கி வருவனவெல்லாம்
இதனான் அமைக்க. (27)
எய்தியதன்மேற் சிறப்புவிதி
|