இது முன்னிற்சூத்திரத்திற்
பக்குநின்ற காமத்திற்கன்றிப் ‘புரைதீர்
காம’த் (தொல். புறம். 26) திற்குப் புறனடை கூறுகின்றது.
(இ-ள்.)
குழவிமருங்கினும் கிழவதாகும் - குழவிப் பருவத்துங் காமப்பகுதி உரியதாகும். எ-று.
‘மருங்கெ’ன்றதனான் மக்கட்குழவியாகிய ஒருமருங்கே கொள்க; தெய்வக்குழவி
யின்மையின். இதனை மேலவற்றோ டொன்றாது வேறு கூறினார்.
தந்தையரிடத்தன்றி ஒரு திங்களிற் குழவியைப் பற்றிக் கடவுள் காக்க
என்று கூறுதலானும், பாராட்டுமிடத்துச் செங்கீரையுஞ் தாலுஞ்
சப்பாணியும் முத்தமும் வரவுரைத்தலும், அம்புலியுஞ் சிற்றிலுஞ்
சிறுதேருஞ் சிறு பறையுமெனப் பெயரிட்டு
வழங்குதலானு மென்பது.
இப்பகுதிகளெல்லாம்
‘வழக்கொடு சிவணிய’ (தொல். புறம்.31) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். இப்பருவத்துக்கு
உயர்ந்தவெல்லை மூவகை வருணத்தாரும் இருபிறப்பாளராகின்ற
பருவமாம். வேளாளர்க்கும் மூவகையோர்க்குரிய பருவமே
கொள்க. குழவிப்பருவங் கழிந்தோர் அது வேண்டியக்காலும்
அக்குழவிப் பருவமே கருதிப் பாடுக வென்றதற்குக் ‘கிழவதாகு’மென்றார்.
இதற்குப் பரிசில்வேட்கை அக்குழவிக் கணன்றி அவன்
தமர்க்கண்ணுமாமென் றுணர்க.
உ-ம்:
‘‘அன்னா யிவனொருவ னந்தரத்தா னானென்றான் முன்ன மொருகான் மொழியினான் - பின்னுங் கலிகெழு கூடலிற் கண்ஞீடி வந்து புலியாய்ப் பொருவான் புகும்’’
‘அந்தரத்தானா
னென்றான்’ அம்புலி வேறாயும்
ஒருகாலத்தே விளையாட்டு நிகழ்த்துமென. இது மதுரையிற் பிட்டுவாணிச்சி
மகற்கு மங்கலக் குறிப்பாற் சான்றோர் கூறியது.
(29)
ஊரிற்பொதுமகளிரொடு கூடிவந்த விளக்கமும் இத்திணைக்கு
உரித்தாதல்
|