இது ‘அமரர்கண் முடியும்’
(தொல். புறம்.26) என்னுஞ் சூத்திர
முதலியவற்றுக்கெல்லாம் புறனடை.
(இ-ள்.)
கடவுள் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும் முதலாக
ஊரொடு
தோற்ற மீறாகக்
கிடந்தனவெல்லாஞ் சான்றோர்
செய்த
புலனெறிவழக்கோடே பொருந்திவந்த பகுதிக்கண்ணேயான பொருள்களாம்
எ-று.
எனவே, புலனெறிவழக்கின்
வேறுபடச் செய்யற்க என்பது கருத்து.
கடவுள் வாழ்த்துப்
பாடுங்கான் முன்னுள்ளோர் பாடியவாறன்றி
முப்பத்துமூவருட் சிலரை விதந்து வாங்கிப் பாடப்பெறாது.
இனி
அறுமுறைவாழ்த்துப் பாடுங்கால் முன்னுள்ளோர் கூறியவாறன்றி ஆவிற்கினமாகிய எருமை முதலியனவும்
வாழ்த்தப்படா.
இனிப்
புரைதீர் காமம் புல்லிய வகையும் ஒருவன்றொழுங்
குலதெய்வத்தை நோக்கியன்றி வரைவின்றிக்
கூறப்படாது.
இனிச் செந்துறைப்பாடாண்பாட்டு
முன்னுள்ளோர் கூறியவாறன்றி
இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்தும் கூறப்படாது.
இனிக் காமப்பகுதிக்
கடவுளரைக் கூறுங்காலும் பெண்டெய்வத்தோடு
இயல்புடையாரை
|