க் கூறினன்றி எண்வகை வசுக்கள்
போல்வாரையும் புத்தர், சமணர் முதலியோரையுங்
கூறப்படாது.
இனி மக்களும்
ஒருவனைத் தெய்வப்பெண்பால் காதலித்தமை கூறுங்காலும் மக்கட்பெண்பாற்குக்
காதல் கூறுங்காலும் முன்னோர் கூறியவாறன்றிக்
கூறப்படாது.
இனிக்
குழவிப்பருவத்துக் காமங் கூறுங்காலும்
முன்னர்க் காப்பும்
பின்னர் ஏனையவுமாக முன்னுள்ளோர் கூறியவாறன்றிக்
கூறப்படாது.
இனி ஊரொடு
தோற்றமும் பரத்தையர்க்கன்றிக்
குலமகளிர்க்குக்
கூறப்படாது.
இன்னுஞ் ‘சிவணிய வகைமை’ என்றதனானே முற்கூறியவற்றோடே
நாடும் ஊரும் மலையும் யாறும் படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேருந் தாரும் பிறவும் வருவனவெல்லாங் கொள்க.
உ-ம்:
‘‘முற்பற்றி னாரை முறைசெய்யிற் றானென்னைக் கைப்பற்றக் கண்டேன் கனவினு - ளிப்பெற்றித் தன்னைத் தனக்கே முறைப்படி னென்செய்யும் பொன்னம் புனனாட்டார் கோ’’
‘‘ஏரியு மேற்றத்தி னாலும் பிறர்நாட்டு வாரி சுரக்கும் வளனெல்லாந் - தேரி னரிதாளின் கீழுகூஉ மந்நெல்லே சாலுங் கரிகாலன் காவிரிசூழ் நாடு’’
(பொருந.)
இவை நாடும் யாறும் அடுத்துவந்தன.
‘‘மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்மு ளொலியும் பெருமையு மொக்கும் - மலிதேரான் கச்சி படுவ கடல்படா கச்சி கடல்படுவ வெல்லாம் படும்’’
இஃது ஊர் அடுத்துவந்தது.
‘‘மிதியற் செருப்பிற் பூழியர் கோவே குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு நீரறன் மருங்கு வழிப்படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிரைப் பொருந’’
(பதிற்றுப்.21)
இது மலை யடுத்தது.
‘‘ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்’’
(புறம்.14)
இது படையடுத்தது.
‘‘பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான் பாம்புண் பறவைக் கொடிபோல- வோங்குக பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி’’
(புற. வெ. பாடாண்.39)
இது கொடியடுத்தது.
‘‘வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
|