மாலை வெண்குடை யொக்குமா லெனவே’’
(புறம்.60)
இது குடையடுத்தது.
‘‘முரசுமுழங்கு தானை மூவருங் கூடி யரசவை யிருந்த தோற்றம் போல’’
(பொருந.54.5)
இது முரசடுத்தது.
‘‘சாலியரி சூட்டான் மடையடைக்கு நீர் நாடன் மாலு மழைத்தடக்கை மாவளவன் - காலியன்மா மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப் பொன்னுரைகற் போன்ற குளம்பு’’
இது புரவியடுத்தது.
‘‘அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சான் மன்ன ரெயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான் காய்சினவேற் கிள்ளி களிறு’’
(முத்தொள். யானைமறம்.17)
இது களிறடுத்தது.
‘‘நீயே, யலங்குளைப் பரீஇயிவுளிப் பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி மாக்கட னிவந்தெழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ’’
(புறம்.4)
இது தேரடுத்தது.
‘‘மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப’’ (புறம்.10)
இது தாரடுத்தது.
இவற்றுட் சிலவற்றை
வரைந்துகொண்டு சின்னப்பூ
வென்று
பெயரிட்டு இக்காலத்தார் கூறுமா றுணர்க.
(31)
புறத்திணைக்குரிய மெய்ப்பெயரினிடமாகவும் அகத்திணை
வருமாறு
|