ம் பற்றி, அகத்திணைப் பொருள் நிகழவும் பெறுமென்பதாம்.
உ-ம்:
‘‘அரிபெய்
சிலம்பின்’’ என்னும் (6) அகப் பாட்டினுள் (6) தித்தனெனப் பாட்டுடைத்தலைவன் பெயரும், பிண்ட நெல்லினென நாடும், உறந்தையென ஊருங், காவிரியாடினை யென யாறுங் கூறிப், பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க.
‘மருங்கு’
என்றதனாற் பாட்டுடைத் தலைவன் பெயர் கூறிப்பின்னர் நாடு முதலியன கூறல் மரபென்று கொள்க. அதுவும் அச்செய்யுளாற் பெற்றாம்.
‘‘நிலம்பூத்த மரமிசை நிமிர்பாலுங் குயிலெள்ள நலம்பூத்த நிறஞ்சாய நம்மையோ மறந்தைக்க கலம்பூத்த வணியவர் காரிகை மகிழ்செய்யப் புலம்பூத்துப் புகழ்பானாக் கூடலு முள்ளார்கொல்.’’
(கலி.27)
இதனுட் கூடலிடத்துத் தலைவி யென்பது கூறினார்.
‘‘கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின் மேல்விளையாட்டும்
விரும்பார்கொல்.’’
(கலி.27)
இதனுள் வென்வேலான் குன்றென மலை கூறினார்.
‘‘திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நீழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் இசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்’’
(கலி.26)
இதனுள் ஆறு கூறினார்.
‘‘புனவளர் பூங்கொடி’’ என்னும் (27) மருதக்கலியும் அது.
‘‘கரிய மலர்நெடுங்கட் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக்
காட்டி யரியசூள் பொய்த்தா ரறனிலரென் றேழையம்யாங் கறிகோ
மைய விரிகதிர் வெண்மதியு மீன்கணமு
மாமென்றே விளங்கும்
வெள்ளைப் புரிவளையு முத்துங்கண் டாம்பல்
பொதியவிழ்க்கும்
புகாரே யெம்மூர்’’
(சிலப். கானல்.7)
இது முதலிய மூன்றும் புகாரிற் றலைவியெனக் கூறியவாறு
|