விடா துடைத்தாதலின்
அதனை அப்பெயராற் கூறினார், முத்துக் கொடி யெனவும் மேகவள்ளியெனவுங் கூறுவது போல. கந்தழி அவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்றலின் இடையே வைத்தார்.
இனி அமரரென்னும் ஆண்பாற் சொல்லுள் அடங்காத பெண்பாற்றெய்வமும் வள்ளியென்னுங் கடவுள் வாழ்த்தினுட் படுவனவாயின, பாடா ணெனப்படா வாயினுமென்பது;
என்னை? ஞாயிறு நெருப்பின்றன்மையும் ஆண்டன்மையும் உடைமையானுந், திங்கள் நீரின்றன்மையும்
பெண்டன்மையும் உடைமையானு மென்பது. அல்லதூஉம், வெண்கதிர்
அமிர்தந் தேவர்க்கு வழங்கலானும் வள்ளி யென்பதூஉமாம் என்பது.
உ-ம்:
‘‘மேகத்தான் வெற்பா னிமையான் விழுப்பனியா னாகத்தா னீமறைய நாட்கதிரே - யோகத்தாற் காணாதார் நின்னை நிலையாமை கட்டுரைப்பர் நாணாத கண்ணெனக்கு நல்கு’’
இது கொடிநிலை வாழ்த்து.
‘‘சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்குஞ் சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர்’’
இது கந்தழி வாழ்த்து.
‘‘பிறைகாணுங் காலைத்தன் பேருருவ மெல்லாங் குறைகாணா தியாங்கண்டு கொண்டு - மறைகாணா தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென் றாய்ந்தது நன்மாயை யாம்’’
இது வள்ளி வாழ்த்து.
‘‘தனிக்கணிற் பாகமுந் தானாளு மாமை பனிக்கண்ணி சாவு படுத்துப் - பனிக்கணந் தாமுறையா நிற்குமத் தண்மதிக்குத் தாயிலளென் றியாமுரையா நிற்கு மிடத்து’’
இது வள்ளிப்பாற்பட்ட பெண்பாற் கடவுள்வாழ்த்து.
(33)
எய்தாதது எய்துவித்தல்
|