இது முன்னிற்
சூத்திரத்து அதிகாரப்பட்டு நின்ற மக்கட் பாடாண்டிணைக் குரிய துறை கூறுகின்றது.
(இ-ள்.)
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் - பிறர்க்கு ஈவோரைப் பிறரி னுயர்த்துக் கூறிப் பிறர்க் கீயாதாரை இழித்துக் கூறலும்;
சான்றோர்க்குப்
பிறரை யிழித்துக் கூறற்கண்ணது தக்க தன்றேனும் நன்மக்கள் பயன்பட வாழ்தலுந் தீயோர் பயன்படாமல் வாழ்தலுங் கூறக்கேட்டு ஏனையோரும் பயன்பட வாழ்தலை விரும்புவரென்பது பயப்பக் கூறலின் இவர்க்கு இங்ஙனங் கூறுதல் தக்கதாயிற்று. இதனை ஏத்தலும் பழித்தலும் ஏத்திப் பழித்தலுமென மூவகையாகக் கொள்க.
உ-ம்:
‘‘தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர் வளைக்கை விறலியர் படப்பைப் கொய்த அடகின் கண்ணுறை யாக யாஞ்சில அரிசி வேண்டினே மாகத் தான்பிற வரிசை யறிதலிற் றன்னுந்
தூக்கி
|