யிருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர் தேற்றா வீகையு முளதுகொல் போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே’’
(புறம்.140)
இது கொடுப்போர் ஏத்தியது.
‘‘பாரி பாரி யென்றுபல வேத்தி யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே’’
(புறம்.107)
என்பதுவும் அது.
‘‘ஒல்லுவ தொல்லு மென்றலு மியாவர்க்கு மொல்லா தில்லென மறுத்தலு மிரண்டு மாள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே யொல்லா தொல்லு மென்றலு மொல்லுவ தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே யிரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயி லத்தை யனைத்தா கியரினி யிதுவே யெனைத்துஞ் சேய்த்துக் காணாது கண்டன மதனால் நோயில ராகநின் புதல்வர் யானும் வெயிலென முனியேன் பனியென மடியேன் கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை நாணல தில்லாக் கற்பின் வாணுதன் மெல்லியற் குறுமக ளுள்ளிச் செல்வ லத்தை சிறக்கநின் னாளே’’
(புறம்.196)
‘‘புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை யிகழ்வாரை நோவ தெவன்’’
(குறள்.237)
இவை கொடாஅர்ப் பழித்தல்
‘‘களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணனொடு சேப்ப வீகை யரிய விழையணி மகளிரொடு சாயின் றென்ப வாஅய் கோயில் சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி யுரைசா லோங்குபுக ழொரீஇய முரசுகெழு செல்வர் நகர்போ லாதே’’
(புறம்.127)
இஃது ஆயைப் புகழ்ந்து ஏனைச் செல்வரைப் பழித்தது.
‘‘மின்னுந் தமனியமும் வெற்றிரும்பு மொன்றாகிப் பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே கொன்னே யொளிப்பாரு மக்களா யொல்லுவ தாங்கே யளிப்பாரு மக்களா மாறு’’
(பெரும்பொருள் விளக்கம்.புறத்திரட்டு 228)
இதுவும் அது.
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வா
|